
பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள் பாரத பிரதமரின் நிதிக்கும், அவரவர் மாநில முதலமைச்சர்களின் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் முடிந்த நிதியை கொடுத்து உதவிய நிலையில், கோலிவுட் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் பலரும் தொடர்ந்து தங்களால் முடிந்த உதவிகளை அறிவித்து வருகிறார்கள்.
அதே போல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் கஷ்டப்படும் லட்ச கணக்கான பெப்சி ஊழியர்களுக்கு, அஜித் ஏற்கனவே ரூபாய். 1 .25 கோடி உதவியை அறிவித்த நிலையில், தற்போது தளபதி விஜய் சற்று நேரத்திற்கு முன் , 1 .30 கோடி உதவியை அறிவித்துள்ளார்.
அந்த வகையில், பாரத பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சம், தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் : 50 லட்சம், கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம், பெப்சி அமைப்பிற்கு ரூபாய் 25 லட்சம், கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா முதலமைச்சர் நிதிக்கு தலா ரூபாய் 5 லட்சம் , மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.