மலையாள இயக்குனர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக தொடர்ந்து தகவல்கள் வெளியான நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவலை வெளியாகியுள்ளது.
இயக்குனரும், நடிகருமான சித்திக் மாரடைப்பு காரணமாக கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக தற்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 69.
சித்திக் கல்லீரல் நோய் மற்றும் நிமோனியா பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மெல்ல மெல்ல இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தார். மருத்துவர்களும் மீண்டும் அவரின் உடல்நிலை தேறி வருவதை உறுதி செய்த நிலையில்... நேற்று மதியம் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட சித்திக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சித்திக் உயிரிழந்தார்.
மெகா வெற்றிக்கு தயாராகும் தலைவர்..! 'ஜெயிலர்' படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் மட்டும் இத்தனை கோடியா?
கேரள மாநிலத்தை சேர்ந்த சித்திக் உள்ளூர் நாடகக் குழுக்கள் மூலம் திரையுலகை அடைந்தார். பின்னர் கொச்சி கலாபவனின் மிமிக் பரேட் மூலம் ஒரு கலைஞராக அவதாரம் எடுத்தார். பின்னர், சித்திக் மிமிக்ஸ் பரேட் காலத்தைச் சேர்ந்த தனது நண்பரான லாலுடன் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார். பின்னர் இயக்குனர் பாசிலிடம் உதவியாளராக இருந்த சித்திக். ‘பாப்பான் ஸ்ரீ பாப்பானி’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
இதை தொடர்ந்து மோகன் லால், மாமூட்டி போன்ற பல முன்னணி மலையாள நடிகர்களை வைத்து படம் இயக்கினார். இவரின் படங்களில் காமெடி காட்சிகள் கொஞ்சம் ஹை லைட்டாக இருக்கும் என்பதால், இவரின் படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. மலையாளம் மட்டும் இன்றி... தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் சித்திக் பல படங்களை இயக்கியுள்ளார்.
விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!
குறிப்பாக தமிழில் இவர் தளபதி விஜய் மற்றும் சூர்யாவை வைத்து இயக்கிய பிரெண்ட்ஸ் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வடிவேலுவின் நேசமணி காமெடி ரோல் யாராலும் மறக்க முடியாத ஒன்று. அதே போல், விஜயை வைத்து இவர் இயக்கிய காவலன், மற்றும் விஜயகாந்த் - பிரபு தேவாவை வைத்து இயக்கிய எங்கள் அண்ணா போன்ற படங்களிலும், வடிவேலுவின் காமெடி அட்ராசிட்டி வேற லெவலில் இருந்தது. இந்த மூன்று படங்களிலுமே வடிவேலுவின் நேசமணி, அம்மாவாசம், மயிலு போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நிலைத்தது.
இப்படி ரசிகர்கள் மனதில் என்றேனும் நீங்காத படங்களை கொடுத்த, இயக்குனர் சித்திக் மரணம் திரையுலகிற்கே மிகப்பெரிய இழப்பு என, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் ஆதங்கத்தோடு இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சித்திக் ஒரு இயக்குனர் என்பதை தாண்டி, சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றியிலும் நடுவராக கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.