
சினிமா என்ற ஒரு மாய உலகம் பல நூறு ஆண்டுகளாக நம்மை மகிழ்வித்தும், சிந்திக்கவைத்தும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நம்மை ஒரு குறிப்பிட்ட மனநிலைக்கு கொண்டு செல்வது அந்த திரைப்படத்தின் கதையை நேர்த்தியாக அமைத்த இயக்குனர் என்று கூறினால் அது மிகையல்ல.
அந்த வகையில் கடந்த 1973ம் ஆண்டு வெளியான ஒரு ஹாலிவுட் திரைப்படம், மக்களுக்கு ஒரு புது விதமான திகில் ஊட்டும் அனுபவத்தை கொடுத்தது. அந்த திரைப்படத்தின் பெயர் தான் The Exorcist, அன்று தொடங்கி பல திகில் படங்களை தொடர்ச்சியாக இயக்கியும், தயாரித்தும், எழுதியும் வெளியிட்டவர் தான் வில்லியம்.
1972 மற்றும் 1973ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் வெளியான தி பிரெஞ்சு கனெக்சன் மற்றும் The Exorcist ஆகிய இரு திரைப்படங்களுக்காகவும் இவர் ஹாலிவுட் உலகில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!
சின்னத்திரை சீரியல்கள், ஆவண குறும்படங்கள், வெள்ளித்திரை படங்கள் என்று இவர் தனது இயக்குனர் பாதையை பெரிதாக்கி கொண்டே போனார். இறுதியாக கடந்த 2011ம் ஆண்டு வெளியான கில்லர் ஜோ என்ற திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் இயக்கத்தில் The Caine Mutiny Court-Martial என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாளாகவே உடல்நலம் குன்றியிருந்த வில்லியம் நேற்று ஆகஸ்ட் 7ம் தேதி இந்த மண்ணை விட்டு பிரிந்தார் அவருடைய வயது 87.
சுமார் 50 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வரும் திகில் படங்களின் தந்தையான வில்லியம், அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் கடந்த 1935ம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.