விஜய் ,ஜெயம்ரவிக்கு ஏற்பட்ட மேஜிக் ஒற்றுமை... 

 
Published : May 18, 2017, 06:59 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
விஜய் ,ஜெயம்ரவிக்கு ஏற்பட்ட மேஜிக் ஒற்றுமை... 

சுருக்கம்

vijay and jayamravi acting magic man character

அட்லி இயக்கத்தில் இளைதளபதி விஜய் நடித்து வரும் 61 வது படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். அதில் மேஜிக்மேன் வேடதில் ஒரு கதாபாத்திரம் உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.

விஜய்யை முதன்முதலாக மேஜிக்மேனாக பார்க்க அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ஆர்வத்தில் இருந்த நிலையில் ஜெயம் ரவியும் தனது அடுத்த படத்தில் மேஜிக்மேனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள 'வனமகன்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்து வந்த  'டிக் டிக் டிக்'. திரைப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவி மேஜிக்மேனாக நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. 

ஒரே நேரத்தில் விஜய்யும், ஜெயம் ரவியும் மேஜிக்மேனாக நடித்து வருவது அபூர்வ ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.
 
தமிழின் முதல் விண்வெளி படமான 'டிக் டிக் டிக்' படத்தில் ஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை நேமிசந்த் ஜெபக் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை: 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!
ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!