தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் இவரா? முதல் முறையாக கிடைத்த வாய்ப்பை கசிய விட்ட பிரபலம்!

By manimegalai aFirst Published May 6, 2020, 6:32 PM IST
Highlights

"பிகில்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, "கைதி" புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். கடந்த மாதமே வெளியாக இருந்த இந்த படம், தற்போது, கொரோனா  பிரச்சனை காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது அனைவரும் அறிந்தது தான்.
 

"பிகில்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, "கைதி" புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். கடந்த மாதமே வெளியாக இருந்த இந்த படம், தற்போது, கொரோனா  பிரச்சனை காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது அனைவரும் அறிந்தது தான்.

இந்த படம் வெளியாவதில் தாமதம் ஆகி வருவதால், இப்போது விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. அந்த வகையில், இப்போது இந்த படத்தில் யார் இசையமைப்பார் என்கிற சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. 

தளபதி விஜய்யின் படங்கள் என்றாலே அவருடைய ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும். அந்த வகையில் உருவாகி உள்ள திரைப்படம் தான் 'மாஸ்டர்'. இதில் விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்து அசத்தியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து  நடித்துள்ளது.

மேலும் செய்திகள்: நயன்தாராவின் ஹீரோவுக்கு ஜோடியாகும் சின்னத்திரை நயன் வாணி போஜன்!
 

இந்த படம் ஓடிடி  தளத்தில்  வெளியாக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவதால், எப்போது திரையரங்கம் திறக்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

மேலும் அவ்வப்போது அடுத்ததாக விஜய் நடிக்க உள்ள  65வது படத்தின் பற்றிய புதிய புதிய தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். இப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

மேலும் செய்திகள்: ஊரடங்கு நேரத்தில்... நடிகை ரோஜாவின் பாதங்களுக்கு பூ போட்டு வரவேற்பு! நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!
 

தற்போது, விஜய் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யார் இசையமைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில்,  இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளாராம். தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை உறுதி செய்வது போல் அவர் சில வார்த்தைகளை விட்டுள்ளார்.  

தமிழில் இதுவரை ஒஸ்தி, சேட்டை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள தமன், தெலுங்கில் பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்துள்ள போதிலும், விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!