கசிந்தது விஜய்யின் 62 பட டைட்டில்! ரசிகர்கள் கொண்டாட்டம்...

 
Published : May 26, 2018, 12:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
கசிந்தது விஜய்யின் 62 பட டைட்டில்! ரசிகர்கள் கொண்டாட்டம்...

சுருக்கம்

vijay 62 movie title leaked in social

துப்பாக்கி, கத்தியின் பிரமாண்ட வெற்றிக்குப்பின் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய் 62 படத்துக்கு ஏதாவது ஒரு ஆயுதத்தின் பெயரையே சூட்டப்படலாம் என்று யோசித்து வருகிறார்களாம்.

வேட்டைக்காரன், சுறா படத்தை அடுத்து மீண்டும் விஜயுடன் கைர்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு வில்லன்களாக  பழ.கருப்பையா, ராதாரவி நடிக்கின்றனர். இந்தப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யும் முதலில் இணைந்த படம் துப்பாக்கி. அந்தப் படம் வணிகரீதியில் வெற்றி பெற்றதன் காரணமாக அடுத்து இருவரும் இணைந்த படத்துக்கு “கத்தி” என பெயர் வைத்தனர். இந்த வரிசையில் ஏ.ஆர். முருகதாசும் விஜய்யும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய் 62 படத்துக்கு ஏதாவது ஒரு ஆயுதத்தின் பெயரையே சூட்டப்படலாம் என்று யோசித்து வருகிறார்களாம்.  அது தற்போது உண்மையாகியுள்ளது.

விஜய் 62 என்று குறிப்பிடப்படும் இந்தப் படம் “விவசாயம்” தொடர்பான கதை என்ற தகவல் பரவியுள்ளது. விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் பணக்காரராக விஜய் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படத்திக் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் டைட்டில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் அடிபடுகிறது. அதன்படி படத்துக்கு “கோடாரி” என தலைப்பு வைக்க படத்தயாரிப்பு தரப்பில் கூறுவதாக சொல்லப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

HBD Rajinikanth : கோலிவுட்டின் ‘பவர்ஹவுஸ்’... இந்திய சினிமாவின் ராஜாதி ராஜா ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று..!
மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!