தளபதி ரசிகர்களே... உங்களுக்கு “ விஜய் 62 ” புத்தாண்டுக்கு செம ட்ரீட் இருக்கு!

 
Published : Dec 27, 2017, 08:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
தளபதி ரசிகர்களே... உங்களுக்கு “ விஜய் 62 ” புத்தாண்டுக்கு செம ட்ரீட் இருக்கு!

சுருக்கம்

vijay 62 film updates at new year day

இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமான  மெர்சல்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார்.

விஜயின் சினிமா கேரியரில் `துப்பாக்கி’, `கத்திபடங்கள் இளையதளபதியை சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உச்சத்திற்கு கொண்டு சேர்த்த படமாக இருந்தது. இதனை அடுத்து மூன்றாவது முறையாக இருவரது கூட்டணி அமையாதா என ஏங்கிய நேரத்தில் விஜய்  ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

சமூக அக்கறை கொண்ட படமாக உருவாகும் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு  ஜோடியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது.

இந்த படத்திற்கு தலைப்பு இன்னமும் வைக்கப்படாத நிலையில், புத்தாண்டை முன்னிட்டு விஜய் 62 படத் தலைப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு “தளபதி அல்லது சரவெடி” என இரண்டு டைட்டில் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் புத்தாண்டுக்கு தலைப்பு வெளியாகும் பட்சத்தில் அது விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்