
பிரபல கவர்ச்சி நடிகை முதல் முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இந்தப் படத்தின் தலைப்பை இன்று அறிவிப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை இந்தப் படத்தின் தலைப்பு தேவி என்கிற வார்த்தையில் முடியும் என்றும் இதன் சரியான தலைப்பை யூகிப்பவர்கள் சன்னி லியோனுடன் செல்பி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது எனவும் படக்குழு தெரிவித்தது. இதனால் பல ரசிகர்கள் தங்களுடைய மண்டையை உடைத்துக் கொண்டு படத்தின் தலைப்பை யோசித்து வந்தனர்.
இந்நிலையில் சொன்னபடி படத்தின் தலைப்பை தற்போது படக்குழுவினர் 'வீரமாதேவி' என்று அறிவித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளது.
'வீரமாதேவி' திரைப்படம் ஒரு பெரிய போர் வீராங்கணையாக வாழ்ந்த ஒருவரின் வழக்கை வரலாற்றை பறைசாற்றும் விதத்தில் எடுக்கப்பட உள்ளது. இவர் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அழகும், வீரமும், புத்திக் கூர்மையும் கொண்ட பெண்மணி.
இந்தத் திரைப்படத்திற்காக சன்னி லியோன் 150 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிக் கொடுதுள்ளாராம். இதுவரை இவர் எந்த ஒரு திரைப்படத்திற்கும் 50 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்காக சன்னி லியோன், பழம்பெரும் வீரக்கலைகளான வாள் வீச்சு, களறி, குதிரை ஏற்றம் என பலவற்றைக் கற்க உள்ளார். இவை அனைத்தையும் சன்னிக்கு பயிற்சி கொடுப்பதற்காக பிரத்யேகமாக மும்பையில் இருந்து ஒரு பயிற்சியாளர் வர உள்ளார்.
ஜனவரி மாதம் முதல் வாரம் தொடங்க உள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக, மிக பிரமாண்டமான செட் போடப்பட உள்ளது. அதே போல் சன்னி லியோனுக்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் நவ்தீப் நடிக்க உள்ளார்.
இந்தப் படம் குறித்து இயக்குனர் வடிவுடையான் கூறுகையில், முதலில் இந்தக் கதையைக் கேட்டதுமே சன்னி லியோன் மிகவும் ஆச்சர்யப்பட்டார். காரணம் இது வரை இப்படி வீரமான பெண் கதாபாத்திரத்தில் இவர் நடித்தது இல்லை. இதனால்தான் இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்தார் என்கிறார் படத்தை இயக்கும் வடிவுடையான். இந்தப் படத்தை தயாரிப்பாளர் பொன்ஸ் ஸ்டீபன் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.