
ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு சர்ச்சையில் யாரோ ஒருவர் சிக்கி அவர்களை மக்கள் அனைவரும் கொஞ்சம் கடினமாகக் கடிந்து கொள்வது வழக்கம் தான்.
தற்போது அந்த வரிசையில் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரிடத்திலும் அதிகம் திட்டு வாங்கியவர் என்கிற பெருமை ஜூலிக்குத் தான் போய்ச் சேரும்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட இவர் பின் பிரபல தொலைக் காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொ ண்டார். ஆரம்பத்தில் இவருக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. ஆனால் இவர் 'தவளை தன் வாயால் கெடும்' என்கிற பழமொழிக்கு ஏற்ப அவர் மீது மக்கள் வைத்திருந்த அன்பை ஒரு சில விஷயங்களால் கெடுத்துக்கொண்டார்.
தற்போது பிரபல தொலைக் காட்சியில் தொகுப்பாளர், திரைப்படம், விளம்பரப்படம் என அனைத்திலும் கலக்கி வருகிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை இவரை ஓவியா ரசிகர்கள் பலர் தொடர்ந்து கழுவி ஊற்றி வருகின்றனர். அந்த வகையில் பார்த்தால் இந்த வருடத்தில் இவரைத் தான் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் கலாய்த்துள்ளனர்.
ஆனால் ஜூலி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் நான் எனக்கு வரும் வாய்ப்பை விடுற மாதிரி இல்லை என தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.