மருத்துவ கல்லூரி முறைகேடை அடுத்து... மருத்துவ முறைக்கேடை தட்டி கேற்கும் விஜய்...

 
Published : Apr 28, 2017, 03:27 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
மருத்துவ கல்லூரி முறைகேடை அடுத்து... மருத்துவ முறைக்கேடை தட்டி கேற்கும் விஜய்...

சுருக்கம்

vijay 61st movie updated

இளைய தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான, பைரவா படத்தில் மருத்துவ கல்லூரிகளில் நடக்கும் முறைகேடுகளை தட்டி கேற்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.

இந்நிலையில் விஜய் தன்னுடைய 61 வது படத்தை, அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி திரைப்படம் தீ பொறி போல் ரசிகர்கள் மனதில் பற்றிக் கொண்டதால், தற்போது விஜயை வைத்து அவர் இயக்கும் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் மருத்துவ துறையில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்  கேற்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மூன்று விஜய் நடிப்பதாக கூறப்படும் இப்படத்தில் அப்பா விஜய்க்கு பிறக்கும், 2 பிள்ளை விஜய்களில் ஒரு விஜய் மருத்துவராக நடிப்பதாகவும்.

அவருக்கு ஜோடியாக அதே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவராக வரும் காஜல் அகர்வாலுக்கும்  விஜய்க்கும் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் விரைவில் மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகள் குறித்த பரபரப்பு காட்சிகள் படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!