
சமீப காலமாக, வாட்டர் டப் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் , என பல்வேறு விளையாட்டுகள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதே போல் தற்போது 'பாட்டில்கேப் சேலஞ்சை பலரும் விரும்பி செய்து வருகிறார்கள்.
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதம், பாலிவுட் நடிகர் அக்சயகுமார், கோலிவுட்டின் ஆக்சன் கிங் அர்ஜூன், நடிகை சுஷ்மிதா சென், உள்ளிட்ட பிரபலங்கள் மட்டும் இன்றி, ரசிகர்கள் பலரும் வாட்டர்கேப் சேலஞ்சை செய்து, அதன் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வெளியிட்டனர்.
இந்த நிலையில் இயக்குனரும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனும் பாட்டில்கேப் சேலஞ்ச் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த விளையாட்டின் விதிபடி, பாட்டில் மூடியை, காலால் தட்டி விட வேண்டும், அனால் அவர் ஏவ்வளவு முயற்சி செய்தும் அது முடியாமல் போகவே கைகளாலேயே அதனை தட்டி விட்டு இந்த விளையாட்டை வித்தியாசமாக செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.