கோவை ஈஷா அறக்கட்டளை.. ஜோராக நடைபெறும் விக்கியின் LIC பட ஷூட்டிங் - வெளியான சில ருசிகர தகவல்கள் இதோ!

Ansgar R |  
Published : Jan 30, 2024, 06:35 PM ISTUpdated : Jan 30, 2024, 06:37 PM IST
கோவை ஈஷா அறக்கட்டளை.. ஜோராக நடைபெறும் விக்கியின் LIC பட ஷூட்டிங் - வெளியான சில ருசிகர தகவல்கள் இதோ!

சுருக்கம்

Vignesh Shivan LIC Movie : விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரபல இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் Love Insurance Corporation படம் உருவாகி வருகின்றது.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சிம்புவின் "போடா போடி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் விக்னேஷ் சிவன். அதன் பிறகு தமிழ் மொழியில் வெளியான நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றார் விக்னேஷ் சிவன். 

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த பட பணிகளை தற்போது துவங்கியுள்ளார். பிரபல இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் முதல் முறையாக மற்றொரு இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படமாக மாறி உள்ளது LIC. 

வயதோ 49.. ஆனாலும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நக்மா - அவரோடு கிசுகிசுக்கப்பட்ட டாப் பிரபலங்கள் லிஸ்ட் இதோ!

தற்போது எல்ஐசி பட படப்பிடிப்பு கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளையில் நடந்து வருகிறது. பிரபல அரசியல் தலைவர் சீமான் அவர்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில். அவருடைய நடிப்பை கண்டு பட குழுவினர் பிரமித்துள்ளதாகவும், இந்த திரைப்படத்திற்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்தில் சீமானுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 

அது மட்டும் இல்லாமல் எல்ஐசி திரைப்படம் தான் ஈஷா அறக்கட்டளையில் எடுக்கப்படும் முதல் திரைப்படமாக அமைந்திருக்கிறது. கங்கன ராணாவத்திற்கு கூட கிடைக்காத ஒரு அனுமதி, விக்னேஷ் சிவனுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 7 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடக்கவுள்ள நிலையில் விரைவில் சீமான், சத்குருவை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

படிப்பு முதல்... நடிப்பு வரை பட்ட கஷ்டம் கொஞ்சம் இல்ல! 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியாவின் சோகம்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஜாடைமாடையாக பேசி வம்பிழுத்த அருணை அடிவெளுத்த முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்