
விஜய், அஜித், சூர்யா, ரஜினி என அனைத்து டாப் ஹீரோக்களுடனும் நடித்துள்ள சூரி, தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என மாறுபட்ட கதை களத்தை கொடுத்த வெற்றி மாறன் தற்போது நடிகர் சூரியை நாயனாக வைத்து ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் சூரி, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், இயக்குனர் கவுதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். அதோடு ஜெய் பீம் படத்தில் கொடூர காவலராக தோன்றி மிரட்டியிருந்த தமிழ், இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததோடு காவலராகவும் நடித்துள்ளார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
ஆனால் இறுதி கட்ட படப்பிடிப்பு திடீர் என நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படாது.. முன்னதாக வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இல்லாதால் படம் தள்ளிப்போனதாக சொல்லப்பட்ட்து.. பின்னர் மீண்டும் துவங்கிய விடுதலை தற்போது எந்த அப்டேட்டும் இல்லாமல் இருப்பதற்கு கரணம்..இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள விஜய்சேதுபதியின் கால்ஷீட் கிடைக்காததே என சொல்லப்படுகிறது...
விஜய் சேதுபதி தற்போது அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதனால் தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். கடைசியாகமணிகண்டன் இயக்கத்தில் 'கடைசி விவசாயி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாக உள்ளது.. அதோடு விக்ரம், மேரி கிருஸ்துமஸ், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், காந்தி டாக்ஸ்,மும்பைக்கார் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார்.. பிறமொழி படங்களில் பிஸியாக இருப்பதன் காரணமாகவே விடுதலை படப்பிடிப்புக்கு விஜய் சேதுபதி கலந்து கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.