திடீரென இடுப்பை பிடித்து இழுத்த ரசிகர்… ஜூனியர் என்டிஆர் செய்த செயல் இணையத்தில் வைரல்!!

Published : Mar 18, 2023, 08:58 PM IST
 திடீரென இடுப்பை பிடித்து இழுத்த ரசிகர்… ஜூனியர் என்டிஆர் செய்த செயல் இணையத்தில் வைரல்!!

சுருக்கம்

திரைப்பட வெளியிட்டு விழா ஒன்றில் கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் தன்னை திடீரென இழுத்துப்பிடித்து நெருங்கும் போது அந்த சூழலை, ஜூனியர் என்டிஆர் கையாண்ட விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரைப்பட வெளியிட்டு விழா ஒன்றில் கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் தன்னை திடீரென இழுத்துப்பிடித்து நெருங்கும் போது அந்த சூழலை, ஜூனியர் என்டிஆர் கையாண்ட விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஷ்வக் சென்னின் சமீபத்திய படமான தாஸ் கா தம்கியின் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜூனியர் என்டிஆர் கலந்து கொண்டார். அப்போது நடந்த நிகழ்வின் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு மத்தியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஜூனியர் என்டிஆரை நெருங்க அவரது இடுப்பைப் பிடித்து இழுத்து மேடைக்கு வந்தார்.

இதையும் படிங்க: சமந்தாவுக்கே டஃப்... 'பத்து தல' படத்தில் ஐட்டம் டான்சில்... கவர்ச்சியில் இறங்கி குத்திய சாயிஷா! வெளியான புகைப்

அப்போது சற்றும் பதட்டப்படாத ஜூனியர் என்டிஆர் மிகவும் அமைதியான முறையில் அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துகொண்டார். மேடையில் ஏறிய அந்த ரசிகரை பாதுகாவலர்கள் தடுக்க முயன்ற போது அவர்களை விட சொல்லி அந்த நபருடன் ஜூனியர் என்டிஆர் புகைப்படம் எடுத்துக்கொண்டதை காணலாம். ஜூனியர் என்டிஆர் தற்போது என்டிஆர் 30 என்ற தலைப்பில் வரவிருக்கும் படத்திற்கான படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இதில் ஜான்வி கபூரும் நடிக்கிறார்.

இதையும் படிங்க: 'பத்து தல' ஆடியோ லான்ச்... நியூ கெட்டப்பில் கோட் - சூட் அணிந்து செம்ம மாஸாக என்ட்ரி கொடுத்த சிம்பு! போட்டோஸ்!

இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. மழைக் காலத்தின் பின்னணியில் ஒரு மனிதன் கத்தியை ஏந்தியிருப்பதை அதில் காணலாம். ஒரு சில படகுகள் பலத்த கடல் அலைகளில் பயணிப்பதையும் அதில் காண முடிந்தது. இந்த படத்தை கொர்டலா சிவா இயக்குகிறார். சமீபத்தில், ஜூனியர் என்டிஆர் நடித்து நடனமாடிய திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு நாடு பாடலுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரபோஸ் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!