"எதிர்பாராததை எதிர்பாருங்கள்..!" - தளபதி 65 படத்தின் இயக்குநர் இவர்தானாம்! இப்படியொரு காம்போவா! தளபதி ரசிகர்கள் உற்சாகம்...!

Selvanayagam P   | others
Published : Dec 17, 2019, 08:15 PM IST
"எதிர்பாராததை எதிர்பாருங்கள்..!" - தளபதி 65 படத்தின் இயக்குநர் இவர்தானாம்! இப்படியொரு காம்போவா! தளபதி ரசிகர்கள் உற்சாகம்...!

சுருக்கம்

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் தளபதி விஜய். தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த பிகில் படம், 50 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்தப் படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் அதேநேரம், தளபதி விஜய், அடுத்து தனது 'தளபதி 64' படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மாநகரம், கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் ஷுட்டிங், தற்போது, கர்நாடக மாநிலம் சிமோகாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விஜய்யுடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், நாசர், அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் 'தளபதி 64' படம், 2020 கோடை விருந்தாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கையில், கடந்த ஒரு மாதமாகவே 'தளபதி 65' படத்தின் இயக்குநர் யார்? என்பது பற்றிய பேச்சுக்கள் இணையத்தில் அதிகமாகவே பரவிவந்தன. ஆரம்பத்தில், 'தடையறத் தாக்க', 'தடம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேணி, 'தளபதி 65' படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. 

தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறனும் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும், விரைவில் இவ்விருவரும் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில், 'தளபதி 65' படத்தின் இயக்குநர் யார்?என்பதை விஜய் முடிவு செய்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த இயக்குநர் வேறுயாருமல்ல! 'ஆடுகளம்', 'விசாரணை', 'வடசென்னை', 'அசுரன்' உள்ளிட்ட தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன்தான். யெஸ், 'தளபதி 65' படத்தை வெற்றிமாறன்தான் இயக்கப்போறாராம். 

இந்தப் படத்தை, 'தெறி', 'அசுரன்' உள்ளிட்ட படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறாராம். 
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போன்று, விஜய் - வெற்றிமாறன் - தாணு கூட்டணியில் 'தளபதி 65' படம் உருவாகவுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், தளபதி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வழக்கமாக, ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்தப் பிறகுதான், தனது அடுத்தப் படம் குறித்து அறிவிப்பதை விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால், விஜய் - வெற்றிமாறன் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் ஜனவரி மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்
ஜனனிக்காக விசாலாட்சி எடுக்கும் ரிஸ்க்; சுத்துபோட்ட போலீஸ்... சிக்கினாரா குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது