தளபதிக்காக ராட்சத பூ மாலையை கிரேனில் கொண்டு வந்து வெறித்தனம் காட்டிய கர்நாடக ரசிகர்கள்! மெர்சலான விஜய்!

Published : Dec 17, 2019, 05:59 PM IST
தளபதிக்காக ராட்சத பூ மாலையை கிரேனில் கொண்டு வந்து வெறித்தனம் காட்டிய கர்நாடக ரசிகர்கள்! மெர்சலான விஜய்!

சுருக்கம்

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடித்து வரும் 64 படத்தின் படபிடிப்பு சென்னையை அடுத்து, தற்போது கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது.

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடித்து வரும் 64 படத்தின் படபிடிப்பு சென்னையை அடுத்து, தற்போது கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது.

விஜய்யை பார்க்க சென்னையில் எப்படி ரசிகர்கள் ரவுண்டு கட்டினார்களோ... அதே போல் தளபதியை பார்க்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் கர்நாடகாவில் உள்ள விஜய் ரசிகர்கள்.

அந்த வகையில், தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஜய்யை காண்பதற்காக அவர் தங்கியுள்ள நட்சத்திர  ஹோட்டலிலும், படப்பிடிப்பு தளத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். ரசிகர்களுக்காக விஜயும் சில நிமிடங்களை செலவழித்து, அவர்களுக்கு கை அசைத்து தன்னுடைய அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய்யை வரவேற்கும் விதமாக அங்குள்ள விஜய் ரசிகர்கள், ராட்சத பூமாலை ஒன்றை தயார் செய்து அதனை கையில் தூக்கி வர முடியாது என்பதால் கிரேன் மூலம் தூக்கி வந்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். 

இதனை சற்றும் எதிர்பார்த்திராத தளபதி, ரசிகர்களின் இந்த செயலை பார்த்து  மெர்சல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ
துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது