மீண்டும் வருகின்றார் பிரம்மாண்ட தயாரிப்பாளர்.. உருவாகும் ஜென்டில் மேன் 2 - கவிப்பேரரசு கொடுத்த அப்டேட்!

By Ansgar R  |  First Published Jul 18, 2023, 12:15 PM IST

மனோஜ் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான "என்றென்றும் காதல்" என்ற திரைப்படத்தை தயாரித்ததோடு, தனது திரை பயணத்திற்கு ஒரு பெரிய ஓய்வு கொடுத்தார் குஞ்சுமோன்.


தமிழ் சினிமாவை பொருத்தவரை "சந்திரலேகா" காலகட்டத்தில் இருந்து பல பிரம்மாண்டமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் 1997ம் ஆண்டு தமிழில், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான "ரட்சகன்" என்ற திரைப்படம் சுமார் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, அன்றைய காலகட்டத்தில் 15 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. 

பிரவீன் காந்தி இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் அவர்களின் தயாரிப்பில் அந்த படம் மாபெரும் வெற்றி கண்டது. அன்று முதல் குஞ்சுமோன் ஒரு பிரம்மாண்ட தயாரிப்பாளராக வலம்வருகின்றார். அதுமட்டுமல்லாமல் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் சூரியன், சங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன், காதலன், கதிர் இயக்கத்தில் வெளியான காதல் தேசம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை குஞ்சுமோன் தயாரித்து வெளியிட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக வந்த ஹுகூம் பாடல்... ரிபீட் மோடில் கேட்கும் ரசிகர்கள்

1980ம் ஆண்டுகளின் இறுதியில் இவர் பல மலையாள திரைப்படங்களை தயாரித்து வெளியிட துவங்கினர்.  அந்த நிலையில் முதன் முதலாக 1991ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான "வசந்தகால பறவைகள்" என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். இறுதியாக மனோஜ் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான "என்றென்றும் காதல்" என்ற திரைப்படத்தை தயாரித்ததோடு, தனது திரை பயணத்திற்கு ஒரு பெரிய ஓய்வு கொடுத்தார் குஞ்சுமோன். 

கொச்சியில் இருக்கிறேன்
ஜென்டில்மேன் 2
படத்திற்குப் பாட்டெழுதுகிறேன்

ஆஸ்கர் விருதுக்குப் பிறகு
கீரவாணி(மரகதமணி)
இசையமைக்கும்
முதல் தமிழ்ப்படம்

அதிகாலைப் பறவைகளாய்ப்
பாடிக்கொண்டிருக்கிறோம்
கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்

குஞ்சுமோன் படத்துக்குக்
குறையிருக்குமா பாட்டுக்கு?
விரைவில்… pic.twitter.com/KavJx0SljL

— வைரமுத்து (@Vairamuthu)

இந்நிலையில் மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் குஞ்சுமோன். இது வேறு எந்த திரைப்படமும் அல்ல கடந்த 1993ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் தான் அது. இந்த திரைப்படத்தை தற்பொழுது கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க, குஞ்சுமோன் இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில், இந்த படத்திற்கான பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். தற்பொழுது இதற்கான பணிகள் கொச்சினில் நடந்து வருவதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

புதிதாக சொகுசு கார் வாங்கிய எதிர்நீச்சல் நாயகி... அந்த காரின் விலை இத்தனை லட்சமா?

click me!