பிரபல பாடலாசிரியர் காலமானார்...! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

Published : May 30, 2020, 07:46 PM ISTUpdated : May 30, 2020, 07:49 PM IST
பிரபல பாடலாசிரியர் காலமானார்...! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

சுருக்கம்

பழம்பெரும் பாடலாசிரியர், காலமானதற்கு திரையுலகை சேர்ந்த பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.  

பழம்பெரும் பாடலாசிரியர், காலமானதற்கு திரையுலகை சேர்ந்த பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

திரைப்படங்களுக்கு அன்று வரை, இன்று முதல் கூடுதல் விறுவிறுப்பை சேர்ப்பது, அந்த படத்தில் வரும் பாடல்கள் தான். இப்படி பட்ட பாடல்கள் உருப்பெறுவது, பாடலாசிரியர்கள் மூலம் தான். அந்த வகையில், பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள பாடலாசிரியர் யோகேஷ் நேற்று காலமானார். 

77 வயதாகும் இவர், பாலிவுட் முன்னணி இயக்குனர்களின் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவருக்கு பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளர். யோகேஷ் ஒரு சிறந்த மனிதர் என அவருக்கு புகழாரமும் சூட்டியுள்ளார். 

பாடலாசிரியர் யோகேஷுக்கு பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால்,  Sakhi Robin (1962) வெளியான இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்களை இவர் எழுதியிருந்தார். கடைசியாக 2018 ல் Angrezi Mein Kehte Hain படத்தில் பாடல் எழுதினார் இந்த படத்திற்கு பின், உடல் நல பிரச்சனையின் காரணமாக பாடல்கள் எழுதாமல் ஓய்வில் இருந்தார். 

இந்நிலையில் இவரின் மறைவிற்கு பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் தொடர்ந்து தங்களுடைய, இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!