"உயிரோட்டம் அளிக்கும் ஆற்றல் கொண்டவர்".. மறைந்த நடிகர் ஆர்.எஸ். சிவாஜி - புகழாரம் சூட்டிய உலக நாயகன்!

Ansgar R |  
Published : Sep 02, 2023, 08:10 PM IST
"உயிரோட்டம் அளிக்கும் ஆற்றல் கொண்டவர்".. மறைந்த நடிகர் ஆர்.எஸ். சிவாஜி - புகழாரம் சூட்டிய உலக நாயகன்!

சுருக்கம்

தமிழ் சினிமாவின் துவக்க காலங்களில் மிகச்சிறந்த நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வந்த எம் ஆர் சந்தானம் அவர்களின் மகன் தான் மறைந்த மூத்த நடிகர் ஆர் எஸ் சிவாஜி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

1981 ஆம் ஆண்டு தனது சகோதரர் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான பன்னீர் புஷ்பங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தவர் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரை உலகில் சுமார் 43 ஆண்டு காலமாக பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார். 

குறிப்பாக 1989 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்து வெளியான அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் "தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க" என்று அவர் ஜனகராஜை  பார்த்து பேசும் வசனங்கள் இன்றளவும் பிரபலம். அன்று தொடங்கி இன்று வரை பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக நெல்சன் இயக்கத்தின் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தேசிய விருது இயக்குனரின் சகோதரரா?

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் அவர் காலமான நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் எனது நண்பரும் சிறந்த குணசித்திர நடிகர் வருமான ஆர் எஸ் சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். 

சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்து நீடிக்கும் படியான உயிரோட்டத்தை அழிக்கக்கூடிய ஆற்றில் கொண்டவர் அவர். எங்களுடைய  ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

அதேபோல கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குனரான நெல்சன் திலீப் குமார் அவர்களும் அவருடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் ராகவா லாரன்ஸ்.. உறுதியான கூட்டணி.. ஹீரோயின் யார் தெரியுமா? மாஸ் அப்டேட்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!