
கடந்த இரண்டு வார காலமாகவே செய்திகளில் பார்க்கும் இடமெல்லாம் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் நிறைந்திருந்தது. தமிழ்நாடு, பெங்களூரு, ஹைதராபாத், மலேசியா மற்றும் துபாய் என்று பல இடங்களில் இந்த படத்துக்கான பிரமோஷன் பெரிய அளவில் நடைபெற்றது. ரிலீசுக்கு முன்பே இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு மாவீரன் திரைப்படம் அமைந்திருந்தது என்று தான் கூற வேண்டும்.
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் உண்மையில் இந்த திரைப்படம் ஒரு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழகத்தில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு மேலாகவும், வெளிநாடுகளில் இரண்டு கோடி ரூபாய்க்கு மேலாகவும் முதல் நாளில் வசூல் செய்துள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ஃபாரின் மாப்பிள்ளை தான் வேண்டும் என அடம்பிடித்து திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகைகளின் லிஸ்ட் இதோ
இந்நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபல மூத்த இயக்குனர் சங்கர் அவர்கள் தனது கருத்தினை தற்பொழுது பதிவு செய்துள்ளார். "இயக்குனர் மடோன் அஸ்வின் மிக நேர்த்தியான ஒரு கதை அமைப்பை மக்கள் ரசிக்கும் வண்ணம் அமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் நடிப்பு அந்த திரைக்கதையை தூக்கி நிறுத்தி இருக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
"தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார் அதிதி என்றும், சரிதா, யோகி பாபு, மிஷ்கின் உள்ளிட்டவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருப்பதாக" இயக்குனர் சங்கர் கூறினார். "சண்டை காட்சிகள் மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டுள்ளது என்றும் உண்மையில் குடும்பங்கள் கொண்டாடுகிற ஒரு வெற்றியாக மாவீரன் திரைப்படம் அமைந்திருக்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.