நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

Published : Sep 27, 2022, 01:51 PM IST
நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

சுருக்கம்

தாதா சாகேப் பால்கே விருது இந்த முறை, பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் நடிகை ஆஷா பாரிக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதற்க்கு பலர் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெறித்து வருகிறார்கள்.  

தென்னிந்திய திரைப்பட துறையில் துறையில் சிறந்து விளங்குவோருக்கு... மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, கடந்த 1969ம் ஆண்டு முதல் முதல் வழங்கப்பட்டு வருகிறது. அமிதாப் பச்சன், சத்யஜித் ரே, ராஜ் கபூர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் (1996), கே.பாலச்சந்தர் (2010), ரஜினிகாந்த்  ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்: டீப் நெக் கவர்ச்சியில் முன்னழகை மிடுக்காக காட்டி அட்ராசிட்டி செய்யும் ராஷ்மிகா! இளசுகளை ஏங்க வைத்த ஹாட் போஸ்!
 

இந்நிலையில், 52வது தாதா சாகேப் பால்கே' விருதினை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய திரைத்துறையில், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகை, என தன்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இவருக்கு பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: மெல்லிய இடையை காட்டி மெர்சலாக்கும் மாளவிகா மோகனன்..! ஜிகு ஜிகு உடையில் ஜிவ்வுனு ஈர்க்கும் போட்டோஸ்..!
 

79 வயதான இவர், "தில் தேகே தேகோ", "கடி படங்", "தீஸ்ரி மன்சில்" மற்றும் "கேரவன்" போன்ற படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர், இந்தி சினிமாவில் எல்லா காலத்திலும் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருக்கும் பரேக் 1990 களின் பிற்பகுதியில் பாராட்டப்பட்ட தொலைக்காட்சி நாடகமான "கோரா ககாஸ்" தொடரை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்