ஆளவந்தான் பட நடிகர் அதிர்ச்சி மரணம்..! உருக்கமாக பதிவிட்டு இரங்கல் தெரிவித்த கமல் ஹாசன்!

By manimegalai a  |  First Published Nov 26, 2022, 10:40 PM IST

தேசிய விருது பெற்ற பழம்பெறும் நடிகர் விக்ரம் கோகலே  உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
 


77 வயதாகும் விக்ரம் கோகலே, பல்வேறு ஹிந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். மேலும் தெலுங்கு, மராத்தி, போன்ற பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். எந்த மொழியாக இருந்தாலும், தன்னுடைய கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு நடிக்கும் விக்ரம் கோகலே, தமிழில் நடிகர் கமலஹாசன் உடன் 'ஹேராம்' மற்றும் 'ஆளவந்தான்' ஆகிய படங்களில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் இவருக்கு கடந்த நவம்பர் 5ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருடைய உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இதயம், சிறுநீரகம், என ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்து வந்தது. பின்னர் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறந்த நடிப்புக்காக தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி உள்ள விக்ரம் போகலேவின் மறைவு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலர் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். மேலும் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது... 'மேடையில் தொடங்கி, திரையில் தன் நடிப்புக் கலையை நிலைநிறுத்தியவர் விக்ரம் கோகலே. ஆளவந்தான்,ஹேராம் சந்தர்ப்பங்களில் அவரது திறனை ரசித்திருக்கிறேன். உடல்நலிவால் மருத்துவமனைக்குச் சென்ற இந்த மாதத்தின் தொடக்கத்திலும் அவரது படம் வெளியாகும் அளவு நடிப்பை நேசித்தவர். அவருக்கு என் அஞ்சலி என தெரிவித்துள்ளார்.


 

மேடையில் தொடங்கி,திரையில் தன் நடிப்புக் கலையை நிலைநிறுத்தியவர் விக்ரம் கோகலே. ஆளவந்தான்,ஹேராம் சந்தர்ப்பங்களில் அவரது திறனை ரசித்திருக்கிறேன்.உடல்நலிவால் மருத்துவமனைக்குச் சென்ற இந்த மாதத்தின் தொடக்கத்திலும் அவரது படம் வெளியாகும் அளவு நடிப்பை நேசித்தவர்.அவருக்கு என் அஞ்சலி.

— Kamal Haasan (@ikamalhaasan)

click me!