
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றி வந்த லெஜெண்ட் சரவணன், பின்னர் நடிகராக அவதாரம் எடுத்தார். அந்த வகையில் இவர் தன்னுடைய விளம்பரங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி, ஜெர்ரி, இயக்கத்தில் நடித்த திரைப்படம் 'தி லெஜன்ட்' ஆக்கப்பூர்வமான கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் லெஜெண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலே நடித்திருந்தார்.
டிஸ்சார்ஜ் ஆன கையேடு 'DSP' படவிழாவில் கலந்து கொண்ட கமல்..! உலக நாயகன் முன் மண்டியிட்ட விஜய் சேதுபதி!
மேலும் ரோபோ சங்கர், தேவதர்ஷினி, போன்ற பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக நடிகர் விவேக் கடைசியாக நடித்த திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வசூல் ரீதியாக இப்படம் வெற்றிபெற வில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தை தி லெஜெண்ட் சரவணன் தயாரித்து நடித்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி உரிமையை அவர் எந்த நிறுவனத்திற்கும் நிறுவனத்திற்கும் விற்பனை செய்ய முன்வரவில்லை என கூறப்பட்டது.
அனால் இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து, 'தி லெஜெண்ட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், பிரபல ஓடிடி நிறுவனம் இந்த படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 'டிஸ்னி ஹாட் ஸ்டார்' நிறுவனம் 'தி லெஜெண்ட்' படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளது. எனவே விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
பாக்கிய லட்சுமி சீரியலுக்கு இந்த நிலையா? TRP ரேட்டிங்கில் அடித்து தும்சம் செய்த சன் டிவி தொடர்கள்..!
மேலும் தி லெஜெண்ட் சரவணன் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட பிரபல இயக்குனர் சுந்தர் சி சரவணன் அருளை சந்தித்ததால், அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படும் நிலையில், விரைவில் அடுத்தபடம் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.