டிஸ்சார்ஜ் ஆன கையேடு 'DSP' படவிழாவில் கலந்து கொண்ட கமல்..! உலக நாயகன் முன் மண்டியிட்ட விஜய் சேதுபதி!

Published : Nov 26, 2022, 04:26 PM IST
டிஸ்சார்ஜ் ஆன கையேடு 'DSP' படவிழாவில் கலந்து கொண்ட கமல்..! உலக நாயகன் முன் மண்டியிட்ட விஜய் சேதுபதி!

சுருக்கம்

நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு, நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக்கியுள்ள 'டிஎஸ்பி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  

உலகநாயகன் கமலஹாசன் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, மற்றும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும்  இந்தியன் 2 படத்திலும் படு பிஸியாக நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, சமீபத்தில் ஹைதராபாத் சென்று வந்த கமல் ஹாசனுக்கு திடீரென காச்சல், இருமல் மற்றும் சளி பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இடைத்தொடர்ந்து இவருடைய உடல்நிலை குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கையின் மூலம் கமல் ஹாசனின் உடல்நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் நடிகர் கமலஹாசன் சளி, காய்ச்சல், மற்றும் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்... தற்போது அவரது உடல்நிலை நன்கு குணமாகி வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இவங்கள என்ன செய்யலாம்? மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்த கமலின் மார்க்கமான பேச்சு.! காத்திருக்கும் சம்பவம்! ப்ரோமோ...

இதை தொடர்ந்து, நேற்று நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு, நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள 'டி எஸ் பி'. படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.  இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊத்தி கொடுத்து... ராதாரவியை ஓரம்கட்டி ரஜினிகாந்த்! சூப்பர் ஸ்டாரின் மற்றொரு முகம்? விரக்தியில் முறிந்த நட்பு!

படம் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்பித்த நடிகர் கமல்ஹாசனுக்கு விஜய் சேதுபதி பூக்கொத்து கொடுத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சில மாதங்களுக்கு பின்னர் இந்த நிகழ்ச்சியின் மூலம் இருவரும் சந்தித்து கொண்டனர். மேடையில் பேசிய கமல் என்னைப் போலவே விஜய்சேதுபதி சினிமா நேசர்... நான் மார்லன் பிராண்டோ முன்பு மண்டியிட்டு அவரது கையில் ஏன் முத்தமிடுவேன்... அப்படித்தான் இன்று விஜய்சேதுபதி என் முன் மண்டியிட்டார். நாளை விஜய் சேதுபதி முன்பு மண்டியிட வேறொரு கலைஞன் வருவான். அதே போல் கமல் ஹாசன் படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறினார்.

பாக்கிய லட்சுமி சீரியலுக்கு இந்த நிலையா? TRP ரேட்டிங்கில் அடித்து தும்சம் செய்த சன் டிவி தொடர்கள்..!

நிகழ்ச்சியில் கமலஹாசன் கலந்து கொண்ட பின் வெளியே வந்த பொது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல் ஹாசன் சின்ன இரும்பல், காய்ச்சல், கூட பெரிய செய்தியாக தற்போது ஊடகங்களில் பேசப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் தன் மீதுள்ள அன்பு ரசிகர்களுக்கு பெருகி உள்ளதும், ஊடகங்களும் தான் எனக் கூறி தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!