
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் இர்ஃபான் கான்.பாலிவுட்டில் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற லைஃப் ஆஃப் பை, பிகு, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இர்ஃபான் கான். ஹாலிவுட்டில் கூட அமேசிங் ஸ்பைடர்மேன், ஜூராஸிக் வேர்ல்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!
சமீபத்தில் இந்த சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்த இர்ஃபான் கான் கொரோனா லாக்டவுன் காரணமாக அங்கேயே சிக்கிக்கொண்டார். இந்நிலையில் இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் ராஜஸ்தானில் உடல் நலக்குறைவால் காலமானார். தனது அம்மாவின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க முடியாமல் வீடியோ காலில் அவரது சடலத்தை பார்த்து கதறி அழுத புகைப்படம் அனைவரையும் கண்ணீரில் மிதக்க வைத்தது.
இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!
இந்நிலையில் தற்போது 53 வயதாகும் இர்ஃபான் கானுக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், புற்றுநோயால் பாதிக்கப்படிருந்த இர்ஃபான் கான் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: நடிகர் இர்ஃபான் கானின் கடைசி ட்வீட்... கண்ணீர் விட்டு கதறித் துடிக்கும் ரசிகர்கள்...!
இர்ஃபான் கானின் மரண செய்தி கேட்டு பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பெரும் புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரரான இர்ஃபான் கானின் உடல் மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற்ற இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் அவரது மகன்கள் அயான், பாபில் ஆகியோர் உட்பட 20 பேர் பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கனத்த இதயத்துடன் இர்ஃபான் கானின் இறுதி ஊர்வலத்தை நடத்தி முடித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.