கூலிங் இல்லாத பீரு, உப்பே இல்லாத ஊறுகாய்! வெங்கட் பிரபு படத்தில் யுவன் மிஸ்ஸிங் மச்சி...

 
Published : May 29, 2017, 07:32 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
கூலிங் இல்லாத பீரு, உப்பே இல்லாத ஊறுகாய்! வெங்கட் பிரபு படத்தில் யுவன் மிஸ்ஸிங் மச்சி...

சுருக்கம்

Venkat Prabhu to announced his next project without Yuvan Shankar Raja

மப்பும் மந்தாரமுமாக அடுத்த படத்துக்கு ரெடியாகிவிட்டார் வெங்கட்பிரபு. செம்ம டிரென்டிங்காக‘ஆர்.கே.நகர்’ என்று டைட்டில் வேறு வைத்தாகிவிட்டது. ஆனால் படத்தின் மேக்கிங் க்ரூ லிஸ்டை பார்த்தால்தான் ஏறிய மப்பெல்லாம் பொசுக்கென்று இறங்கிவிடுகிறது. 

யெஸ், வெங்கட்பிரபுவின் ஆல்டைம் இசை இயக்குநரான யுவன் இஸ் மிஸ்ஸிங்! கங்கை அமரனின் மகனான வெங்கட்பிரபு இதுவரை ஏழு படங்களைக் கொடுத்துள்ளார். அவை அத்தனைக்கும் இசை இயக்குநராக இருந்தவர் அவரதுபெரியப்பா மகனான யுவன் சங்கர் ராஜாதான். ஆனால் வைபவ், சனா, சம்பத் நடிக்க வெங்கி இன்று அறிவித்திருக்கும் புதிய படத்தில் யுவன் இல்லை.

ஒய் ப்ரோ? என்று கேட்டால், லவ்வர் பிரிஞ்சு போன ஃபீலிங்ல சரக்கடிச்சவன் சின்னச் சின்னதா பிளாஸ்பேக் ஓட்டுற மாதிரி ஆர்.கே.நகரின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் டீமும் ஒரு டாட்டாய்ஸை சுற்றிவிடுகிறது. அந்த கொசுவத்தி சுருள் இன்னா சொல்லுதுன்னா...வெங்கட் பிரபுவும், யுவன் சங்கர் ராஜாவும் பிரிஞ்சுட்டாங்களாம். 

காரணம்?...தன் பாடல்களை மேடைக்கச்சேரியில் பாடி பணம் பண்ணினால் தனக்கும் ராயல்டி கொடுக்க வேண்டும் என்று சமீபத்தில் செம டியூன் ஒன்றை போட்டார் இளையராஜா. எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு இது  தொடர்பாக லீகல் நோட்டீஸே அனுப்பியது ராசாவின் வழக்கறிஞர் குழு. இதை ’அபஸ்வரம்’ என்று கடுமையாக எதிர்த்தனர் பல தரப்பட்ட மனிதர்கள். அதில் கங்கை அமரனும் ஒருவர் என்பதுதான் ராசா குடும்பத்துக்கு பெரிய ஷாக். தன் அப்பாவை சித்தப்பா கங்கை அமரன் விமர்சித்ததை யுவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இது தொடர்பாக இரு குடும்ப உறுப்பினர்களுக்குள் கருத்து மோதல்கள் நடந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ராஜா மற்றும் அமரன் இருவரது வாரிசுகள் தங்களுக்குள் நடத்தி வந்த ஃபேமிலி வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து யுவன் வெளியேறிவிட்டாராம். வெங்கட்பிரபு மற்றும் யுவனுக்கு நெருக்கமான வெளி நண்பர்கள் வட்டாரத்தில் இந்த விவகாரம் அப்போது பெரிதாக பேசப்பட்டது. 

ஆனாலும் அதன்பிறகு வெங்கியும், யுவனும் இது தொடர்பாக பெரிதாக வாயும் திறக்கவுமில்லை அதேநேரத்தில் மீண்டும் இணைந்து சுற்றுவதுமில்லை. இருவருக்குமிடையிலிருந்த விரிசல் மீண்டும் ஒட்டியதா? என்று சினி நண்பர்கள் வட்டாரத்தில் எழுந்த கேள்விக்கு இதோ இன்று பதில் கிடைத்திருக்கிறது. 

ஆர்.கே.நகர் படத்தில் யுவன் இல்லை என்பதன் மூலம் தங்களுக்குள் உள்ள பிளவை கிட்டத்தட்ட வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் வெங்கட்பிரபு. வெங்கட்டின் படமென்றாலே யூத்ஃபுல் காமெடிக்கு நிகராக செமத்தியான இசை விருந்தும் கியாரண்டி. சென்னை 28 (சீசன் 1), சரோஜா, கோவா, மங்காத்தா , பிரியாணி, மாசு எ மாசிலாமணி, சென்னை 28 (சீசன் 2) என ஏழு படங்களிலும் குத்தும், மெலடியுமாக அதகளம் பண்ணியிருப்பார் யுவன். 

கோவை, பிரியாணி, மாசு ஆகிய மூன்று படங்களும் வசூல் மற்றும் வரவேற்பு வகையில் சொதப்பினாலும் அதன் பாடல்கள் இன்றும் பேசப்படுகின்றன. மங்காத்தா, சரோஜா போன்ற வெங்கட் பிரபுவின் மரண ஹிட் படங்களுக்கு பாடல்கள் பெரிதாக தோள் கொடுத்ததை யாரும் மறுக்க முடியாது. 

இந்நிலையில் வெங்கியின் புதுப்படத்தில் யுவன் இல்லை. இவர்களின் பர்ஷனல் சண்டைக்காக ரசிகர்களை ஏமாற்றுவது ரொம்ம்ம்ம்ம்ப தப்பு பாஸ். யுவன் காம்பினேஷன் இல்லாத வெங்கட்பிரபு படத்தை, வெங்கியின் மொழியிலேயே வர்ணிப்பதென்றால் ’கூலிங் இல்லாத பீரு! சுருக்குன்னு கடிக்காத சுண்டக்கஞ்சி, உப்பே இல்லாத ஊறுகாய்தான் மச்சி’. 
எல்லாம் சரி, யுவனுக்கு பதிலா ஆர்.கே.நகர் படத்துக்கு மீசிக் போடப்போறது யாரு தெரியுமா? வெங்கியின் ஓன் பிரதர் ப்ரேம்ஜி தான். 
என்ன கொடும சார் இது!


PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?