சமூக வலைதளத்தில் ரவுண்டடிக்கும் 'காலா' ஷூட்டிங்ஸ்பாட் போட்டோஸ்...

 
Published : May 28, 2017, 05:44 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
சமூக வலைதளத்தில் ரவுண்டடிக்கும் 'காலா' ஷூட்டிங்ஸ்பாட் போட்டோஸ்...

சுருக்கம்

kaala shooting spot still leaked at social media

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 164வது படமான 'காலா' படக்காட்சி மற்றும் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி உள்ளது போல புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகிக்கொண்டிருக்கிறது. 

கபாலி படத்திற்குப்பின் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் 'காலா'. கபாலியின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏக வரவேற்பு. சமீபத்தில் படத்தின் பெயர் மட்டும் 'first look' போஸ்டர் வெளியாகி உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இதனிடையே, படத்தின் படபிடிப்பு இன்று மும்பையில் தொடங்குவதாக படகுழு அறிவித்திருந்தது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று விமானம் மூலம் மும்பை சென்றார்.

ஆனால் அதற்குள் 'காலா' படத்தின் ஒரு காட்சி மற்றும் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி பேசி கொண்டிருப்பது போல் புகைப்படங்கள் ட்விட்டர் பேஸ்புக்கில் உலா வந்து கொண்டிருக்கிறது. இயக்குனர் ரஞ்சித்திடம் ரஜினி உரையாடி கொண்டிருப்பது போலவும் புகைப்படங்கள் உள்ளது சில  புகைப்படத்தில் ரஜினி மற்றும் சமுத்திரக்கனி இடம்பெற்றுள்ளனர்.

வெளியாகி உள்ள புகைப்படங்களில் ரஜினி பயங்கர ஸ்டைலாக இருக்கிறார் என ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது படக் குழுவினரே வெளியிட்டார்களா? அல்லது  வேறு யாரும் வெளியிட்டனரா? என்பது பற்றி தகவல் தெரியவில்லை. இதனிடையே காலா படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரமும் வெளியாகியுள்ளதால் மீண்டும் ரஜினியை சுற்றி ஒரு பரபரப்பு உண்டாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?