
'அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு பின், 6 வருடங்கள் கழித்து மீண்டும் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மிக பிரமாண்டமாக வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரத்தேயாக செட் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த படத்தின் நாயகனாக சிம்பு மற்றும் சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன் ஆகியோரை, மேடைக்கு அழைத்து வர, இந்த படத்தின் தயாரிப்பாளரான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டது.
மேலும் செய்திகள்: அஜித்துடன் பைக் ட்ரிப்பில் இணைந்த பிரபல நடிகை..! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்..!
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளரான, ஏ.ஆர்.ரஹ்மான், ஆடியோ வெளியீட்டு விழாவில்... லைவ் பர்பாமென்ஸ் செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து, 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் இடம்பெற்ற மன்னிப்பாயா... பாடலை பாடியுள்ளனர். இதுகுறித்த வீடியோ தான் தற்போது சிம்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
சிம்பு உடல் எடையை குறைத்து மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: ராமராஜன் - நளினி விவாகரத்துக்கு விக்ரம் பட நடிகை தான் காரணமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.