
மலேசியாவைச் சேர்ந்த இண்டிபெண்டெண்ட் பாடகரான முகேன் ராவ்வை, தமிழக மக்கள் மனதில் இடம்பிடிக்க செய்தது என்றால் அது 'பிக்பாஸ் சீசன் 3 ' நிகழ்ச்சி தான். கவின் வெற்றிபெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், லாஸ்லியா இறுதி சுற்றில் கலந்து கொள்ள வேண்டும் என, அவர் 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு வெளியேறியதால், முகேன் ராவுக்கு வெற்றி வாகை சூடும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மாறினார்.
பிக்பாஸ் 3 வது சீசனுக்குப் பிறகு, முகேன் ராவ், 'வெற்றி', என்கிற படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த படத்தை 'வெப்பம்' பட புகழ் அஞ்சனா அலிகான் இயக்குகிறார். ஷிர்டி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், அனுகீர்த்தி வாஸும் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த எந்த ஒரு லேட்டஸ்ட் அப்டேட் தகவல்களும் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது இவர் நடித்து வரும் 'வேலன்' படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் கவின் மூர்த்தி, என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகர் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் 'கென்னடி கிளப்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்து வருகிறார். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்தை, கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டரை, நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். சிங்கிள் கோலி குண்டை வைத்து முகேன் ராவ் மாஸ் காட்டியுள்ளார். இந்த மோசடின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.