Suhail Chandhok : அஜித் ‘தம்பி’யை அட்டாக் பண்ணிய ஓமிக்ரான் - விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை

By Ganesh Perumal  |  First Published Jan 7, 2022, 7:03 AM IST

சுஹைல் மட்டும் அல்ல நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய் ஆகியோருக்கும் அண்மையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 


இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி வாகைசூடிய படம் 'வீரம்'. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். 

5 அண்ணன் தம்பிகளின் பாசம், அவர்களின் கொள்கைகள், அஜித்தின் அசத்தல் நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகள், சந்தானத்தின் காமெடி என ஒவ்வொன்றும் இந்த படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தது. 

Latest Videos

இந்த படத்தில் அஜித்தின் 5 தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தவர் சுகைல் சந்தோக். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், வர்ணனையாளராகவும் விளங்கி வரும் இவர் தற்போது ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பரிசோதனை முடிவுகளை டுவிட்டரில் வெளியிட்டுள்ள சுகைல் சந்தோக், மேலும் கூறியிருப்பதாவது: “2022ம் ஆண்டை ஓமைக்ரான் பாசிட்டிவ் உடன் தொடங்கி இருக்கிறேன். இதுவரை உடல்நிலை பரவாயில்லை. விரைவில் வர்ணனை செய்ய வருவேன் என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சுஹைல் மட்டும் அல்ல நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய் ஆகியோருக்கும் அண்மையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் நடிகை மீனா, மற்றும் அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!