
கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால், திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்த வலிமை, ராதே ஷ்யாம், ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து படங்களின் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், சமீப காலமாக திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.
கடந்த மாதம் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று நடிகை மீனா தனது குடும்பத்தோடு கொரோனாவின் பிடியில் சிக்கியதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அவர் தனது சமூக வலைதள பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால், தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அது தீவிர பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்கும். தயவு செய்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள். பாதுகாப்பாக இருங்கள். விரைவில் மீண்டு வர ஆவலோடு இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள், அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.