
முதல் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுடன் காதல் கிசுகிசுப்பில் சிக்கி, பின் விலகியதாகக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை திரிஷாவுடன் நிச்சயதார்த்தம், நடிகை பிந்து மாதவியுடன் மாலத்தீவில் ஓய்வு என பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கினார் இவர்.
கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னை லாயிட்ஸ் ரோட்டில் பங்களாவில் நடந்த நள்ளிரவு விருந்தில் நடிகை டாப்சியை கட்டிப்பிடிக்கும் போட்டியில் அடிதடி என பிரச்னையாகி பிரபல நடிகர் மூக்கை உடைத்தார். இதற்காக வரும் மணியன் மீது ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
இப்படி சர்ச்சைகள் பலவற்றுக்குச் சொந்தக்காரரான வருண் மணியன் யார் தெரியுமா ? இவரின் அப்பா பெயர் மணியன் - மிகச் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவர். அம்மா ரஞ்சனி மணியன் தொழில் துறையில் நம்பிக்கை பெற்ற பெண் தொழில் முனைவர்.
அவர்களின் ஒரே மகன்தான் வருண். நல்ல தொழிலதிபராக, இந்தியா முழுவதும் இளம் தொழிலதிபராக அறியப்பட வேண்டிய இவர் நடிகைகளோடு ஆடல் பாடல், என ஜாலியாகவே இருந்து வருகிறார். தற்போது இவரைக் கொலை செய்ய இருவர் முயற்சி செய்ததாக ஒரு தகவல் பரவியுள்ளது... அதன் பின்னணி என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
இவர் ஏற்கெனவே ’நான் பெரிய ரியல் எஸ்டேட் தொழில் செய்றேன்... 200 கோடி ரூபாய்க்கு ஒரு லேண்ட் சென்னைக்குள்ள வாங்கப்போறேன். அதை வாங்க விடாம, ஒரு தாதா கும்பல் என்னை மிரட்டுது. என்க்கு போலீஸ் பாதுகாப்பு போடுங்கோ” என்று பெட்டிசன் கொடுத்தார் வருண்.
சென்னை போலீசும் 45 நாட்களுக்கு பேமண்ட் ( காசு கொடுத்து பாதுகாப்பு பெற்றுக்கொள்வது) அடிப்படையில், வருண் மணியனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது. 45 நாட்கள் கழித்து, பேமண்ட் அடிப்படையில் கொடுத்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டது.
இந்த நேரத்தில் தான், அவர் மீது தாக்குதல் நடந்தது. அவர், நந்தனத்தில் இருக்கும் தனது "ரேடியன்ஸ் ரியாலிட்டி" என்ற கம்பெனிக்கு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில், அவரது கம்பெனி லிப்ட்டில், லிப்ட் சர்வீஸ் செய்யும் ஊழியர்கள் இருந்தனர்.
முதலாளி வருகிறாரே என்று அவர்கள், லிப்டிலிருந்து வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது பாவம் வேலை செய்ய வந்தவனுக்கு அவன் வேலை மட்டுமே கண்ணுக்கு தெரிந்துள்ளது. உடனே வருண் “ஏய்... நான்சென்ஸ்... வெளியே வாங்கடா” என்று தன்னுடைய முதலாளி தொனியில் சத்தம் போட்டுருக்கிறார். உடனே வேலை செய்து கொண்டிருந்த இருவரும் ‘’மரியாதையா பேசுங்க...சார்” என்று பதில் கூறியுள்ளனர்.
மேலே தனது ஆபீசுக்கு போனதும், ‘லிப்ட் சர்வீஸ் செய்ய வந்த இரண்டு பேரையும் என் ரூமுக்கு அனுப்புங்க’ என்று கட்டளையிடுகிறார் வருண். அவங்களுக்கு சொன்னதும்...’’ஓ... அவனா.. வேணா அவனை இறங்கி வரச்சொல்லுங்க” என்று இருவரும் நக்கல் செய்கின்றனர். இது தெரிந்ததும், கீழே இறங்கி வந்து அவர்களை அடித்திருக்கிறார் வருண்.
அடிபட்ட ஆத்திரத்தில், ஒருவர் தன்னிடம் இருந்த ஸ்க்ரூ டிரைவரால் வருணை தாக்கிவிடுகிறார். இதுதான் நடந்தது.
உடனே, அந்த இரண்டு பேரையும் போலீசில் பிடித்துக்கொடுக்க புகார் செய்யும்படி உத்தரவிடுகிறார் வருண்.
அவ்வளவுதான் ...’’எனக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லே. அதனாலே என்ன கொல்ல முயற்சி” என்று வருண் டூப் விட்டு வருவதாக பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள் !
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.