நடிகை பிரியா பவானி நடித்துள்ள மேய்த்த மான் இசை வெளியீட்டு விழா!

 
Published : Sep 27, 2017, 03:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
நடிகை பிரியா பவானி நடித்துள்ள மேய்த்த மான் இசை வெளியீட்டு விழா!

சுருக்கம்

meyatha maan audio launch

முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கும் “மேயாத மான்” திரைப்படம் வட சென்னை பின்னணியில் நடக்கும் காதல் கதை. 

இத்திரைப்படத்தில் வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க ரத்ன குமார் இயக்கியுள்ளார். முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரபல திரைப்பாடகர் பிரதீப் குமார் இணைந்து இசையமைகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து விவேக் வேல்முருகன் வரிகளில் அந்தோணி தாசன் பாடிய “தங்கச்சி பாடல்" முதலில் வெளியிடப்பட்டது. இரண்டாவதாக பிரதீப் குமார் எழுதி பாடி இசையமைத்த “என்ன நான் செய்வேன்" பாடல் வெளியிடப்பட்டது. மூன்றாவதாக விவேக் வேல்முருகன் வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடிய  “அடியே எஸ்.மது" பாடல் வெளியிடப்பட்டது. இம்மூன்று பாடல்களும் மக்கள் மத்தியிலும் இணையதளங்களிலும் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து பெற்று வருகின்றன. 

இதனை அடுத்து இப்படத்தின்  முழுப் பாடல் ஆல்பத்தையும் லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களின் “Ovations” நிகழ்ச்சியில்  வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி