'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இந்த படத்தின் முக்கிய பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்களை பிரபல நடிகர் ஸ்ரீமன் வெளியிட்டுள்ளார்.
பிரபல தெலுங்கு திரை உலக இயக்குனர், வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் 'வாரிசு' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.
டப்பிங் பனியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரபல குணச்சித்திர நடிகர் ஸ்ரீமன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது... "இப்போதுதான் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக உள்ள படத்தின் டப்பிங்கை முடித்தேன். இது கண்டிப்பாக எந்த படம் என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள். ஏனென்றால், இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாக கூறி V என்ற எழுத்தை பதிவிட்டு வெற்றி என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: Amala Paul Birthday Special: கவர்ச்சி குயினாக மாறி ரசிகர்களை அசைவைத்த அமலா பாலின் அட்டகாச புகைப்படங்கள்!
நடிகர் ஸ்ரீமன் 'வாரிசு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'வாரிசு' படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்த போது கூட அவர் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார். மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், சங்கீதா, பிரபு,என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ளது.
மேலும் செய்திகள்: Divyabharathi: ஜிமிக்கி கம்மலுடன்... பாவாடை தாவணியில் பளீச் அழகை காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் திவ்யபாரதி!
இன்று விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக 'வாரிசு' படத்தில் விஜய் நடித்த சில புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளும் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. பொங்கலுக்கு வெளியாக உள்ளதை ஏற்கனவே படக்குழு உறுதி செய்த நிலையில், விரைவில்... இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Just finished dubbing for pongal release film. IAm pretty SURE, you guys know the tittle, still take a wild guess, because like me you guys are also saying “WE ARE WAITING” V= VETREE pic.twitter.com/yJISKyOEqV
— actor sriman (@ActorSriman)