Varisu: தளபதியை பார்க்க ஆசையாய் வந்த ரசிகர்கள்..! தடியடி நடத்தி போலீசாரால் விரட்டிவிடப்பட்ட அவலம்!

By manimegalai a  |  First Published Dec 24, 2022, 6:09 PM IST

தளபதி விஜய்யை பார்ப்பதற்காக நேரு ஸ்டேடியம் முன்பு அவரது ரசிகர்கள் குவிந்த நிலையில், போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


கோலிவுட் திரையுலகில் தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'பீஸ்ட்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, கொரோனா அச்சம் காரணமாக நடைபெறாத நிலையில், 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பின்னர், சுமார் இரண்டு வருடங்கள் கழித்து, 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடிக்கிறது. எனவே இதில் தளபதி விஜய்யை நேரில்பார்க்கவும், அவர் கூறும் விஷயங்களை கேட்கவும் பல ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

சென்னை உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெறும், 'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில், கலந்து கொள்வதற்காக  இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் திரு ராஜு  இசையமைப்பாளர் தமன்  தளபதி விஜய்  நடிகை ராஷ்மிகா மந்தனா , இந்த படத்தில் நடித்துள்ள பிரபலங்கள், மற்றும் சிறப்பு விருந்தினராக பல பிரபலங்கள் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

குறிப்பாக விஜய்யை பார்ப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் 'வாரிசு'  இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ளனர். டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் தளபதி விஜய் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில், ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்தின் முன்பு குவிந்து பலமணிநேரமாக காத்திருக்கிறார்கள். மேலும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போலீசார் ரசிகர்களை கலைந்து செல்ல சொல்லியும், ரசிகர்கள் பலர் விஜய்யை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில், ஆசையாக கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த நிலையில்... ரசிகர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் அவர்களை விரட்டி விரட்டி விட்டதாக வெளியாகி உள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!