
வருமான வரி ரெய்டு, விசாரணை என மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் நாட்டாமை நடிகர். அவரும் சின்னத்திரையில் வலுவான நிலையில் வலம்வந்துக் கொண்டிருக்கும் அவரோட மனைவியும் விசாரணைக்காக தொடர்ந்து போய்க்கிட்டு இருக்காங்க. இந்த நிலையில் நாட்டாமையோட வாரிசு நடிகை ஒரு பக்கம் பஞ்சாயத்தை கூட்டிக்கிட்டு இருக்காங்க...
மல்லுவுட்ல கடந்த மாசத்துல சிலரால கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளானதா சொல்லப்பட்ட நடிகை பாவனா விவகாரத்திலேயே ட்விட்டர் மூலமா தன்னோட எதிர்ப்ப தெரிவிச்சதோட தன்கிட்டயும் ஒரு முன்னணி டி.வியோட நிர்வாகி தவறா நடந்துக்க முயற்சி செஞ்சதையும் போல்டா பதிவிட்டிருந்தாங்க இவங்க...
இந்த நிலையில் மலையாளத்துல சமுத்திரகனி இயக்கற புதிய படத்துல நடிகர் ஜெயராமோட இவங்க கமிட் ஆனாங்க. ஒரே நேரத்துல சமுத்திரகனி, ஜெயராமோட இணைஞ்சி நடிக்கறது சந்தோஷம்னு சொன்ன இவங்க, இந்தப் படத்துல இருந்து விலகிட்டாங்க. ஆணாதிக்க மனப்பான்மையோடவும், மேனர்ஸ் இல்லாமலும் இருக்கற தயாரிப்பாளர்களோட இணைஞ்சு பணிபுரிய விருப்பம் இல்லன்னு தன்னோட விலகலுக்கான காரணத்த ட்விட்டர்லயும் போட்டிருந்தாங்க...
தமிழ்ல வெளிவந்து நல்ல பேர வாங்கின அப்பா... படத்தோட ரீமேக்கா உருவாக இருக்க இந்தப் படத்துல இப்ப நாட்டாமை பொண்ணுக்கு பதிலா இனியா நடிக்கறாங்களாம்.
இந்த விஷயத்தில இப்ப ஹைலைட்டான விஷயமா நடந்துருக்கறது, இந்தப் படத்தோட தயாரிப்பாளர்கள் மர்மநபர்கள் சிலரால தாக்கப்பட்டிருக்கிறதுதான். இதுக்கும் நாட்டாமைக்கும் எந்த தொடர்பும் இல்லன்னுதான் சொல்லப்படுது. ஏன்னா அவருக்கு அவரோட சொந்த பஞ்சாயத்த பாக்கவே நேரம் இல்லையாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.