
சமுத்திரக்கனி இயக்கிய வெற்றிப்படமான 'அப்பா' படத்தின் மலையாள ரீமேக் 'ஆகாஷ் மிட்டாய்' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கவிருந்த நிலையில் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த படத்தில் இருந்து விலகியது குறித்து வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ஆணாதிக்கம் மற்றும் நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது, தன்னுடைய இந்த முடிவுக்கு ஆதரவாக இருந்த சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் ஆகியோர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
வரலட்சுமி குறிப்பிட்ட நபர் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது அவர் யார் என தெரியவந்துள்ளது.
நேற்று இரவு கொச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கு வந்த ஒருசில ரவுடிகள் படத்தின் தயாரிப்பாளரான மஹா சுபைரை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நற்பண்பு இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர் என்று வரலட்சுமி கூறியது தயாரிப்பாளர் மஹா சுபைர் ஆக இருக்கலாம் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அவரை அடித்தது யார் என எந்தத்தகவலும் வெளியாகவில்லை.
இதுகுறித்து வரலட்சுமி மேலும் கூறியபோது, 'இந்த விஷயத்தை மேலும் கிளர விரும்பவில்லை. அந்த படத்தின் தயாரிப்பாளர் நடந்து கொண்ட விதம் எனக்கு முற்றிலும் அதிருப்தி ஏற்படுத்தியதால் அவருடன் தொடர்ந்து பணிபுரிய முடியாது என்று விலகிவிட்டேன்' என்று கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.