லட்சுமிமேனன் பாணியில் அறிமுகம் கொடுக்கும் அபர்ணா...

 
Published : Mar 30, 2017, 06:44 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
லட்சுமிமேனன் பாணியில் அறிமுகம் கொடுக்கும் அபர்ணா...

சுருக்கம்

aparna balamurali introduce the 8 thottakal movie

நடிகை லட்சுமி மேனன் எப்படி கும்கி படத்தில் முதலில் நடிக்க தொடங்கி சசிகுமாருடன் நடித்த "சுந்தர பாண்டி" படம் வெளியானதோ அதே பாணியில் முதலில் நடிக்க தொடங்கியது வேறு ஒரு படத்தில் என்றாலும் தற்போது 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொட்டுகிறார் அபர்ணா பாலமுரளி.

மலையாளத்தில் இவர் நடித்த  'மஹேஷிந்தெ பிரதிகாரம்' என்கிற படத்தில் பகத் பசிலுடன் ஜோடியாக நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.

தற்போது ஆர்டீடெக் படித்து படித்துவரும் அபர்ணா பாலமுரளி, சிறுவயதில் இருந்ததே முறையாக கர்னாடிக் சங்கீதம் பழகி வருகிறார். இவர் முதலில் தமிழில் நடிக்க தொடங்கிய பெயரிடாதா படத்தில் சி.சத்தியாவின் இசையில், இவர் குரலில் ஒரு பாடலும் ஒளிக்க உள்ளது அதே போல 8 தோட்டாக்கள் படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார்  என்பது கூடுதல் சிறப்பு.

இவர் நடித்து முதலில் திரைக்கு வரும் 8 தோட்டாக்கள் படத்தை  'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  'பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்'  -  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் மீரா வாசுதேவன் என்கின்ற ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பற்றி அபர்ணா கூறுகையில்...

இந்த 8 தோட்டாக்கள் படத்தில் நடித்து இருக்கின்றேன்.  எப்போதும் சாந்தமாக இருக்கும் இந்த படத்தின் கதாநாயகனுக்கு இருக்கும் ஒரே நட்புறவு நான் தான். 

ஆனால் ஒருபுறம் நட்புறவோடு இருந்தாலும், மறுபுறம் வேறொரு திசையை நோக்கி என்னுடைய கதாபாத்திரம் பயணிக்கும். 8 தோட்டாக்கள் படத்திற்காக கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்து இருக்கும் மன்னிப்பாயா பாடலை நான் பாடி இருக்கிறேன். 

ரசிகர்கள் மத்தியில்  இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருவது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது." என்று உற்சாகமாக கூறியுள்ளார். இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் வெற்றி பெற நியூஸ் பாஸ்டின் வாழ்த்துக்கள்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!