''மிஸ்டர் சந்திரமௌலி'' படத்தில் இணைந்த வரலட்சுமி..!

 
Published : Oct 10, 2017, 06:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
''மிஸ்டர் சந்திரமௌலி'' படத்தில் இணைந்த வரலட்சுமி..!

சுருக்கம்

varalakshmi join mister chandramouli movie

அதிரடியான கூட்டணிகள் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. அந்த பாணியில் சமீபத்திய அதிரடிக் கூட்டணி தான் கார்த்திக், அவரது மகன் கௌதம் கார்த்திக்கின் கூட்டணி.

இயக்குனர் திருவின் அடுத்த படத்துக்கு தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ளனர். இந்தச் செய்தி சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை திரு. தனஞ்செயன் அவர்களின் 'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. 

தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரெஜினா கஸ்ஸான்ட்ரா இப்படத்தில் கதாநாயகியாக  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தச் செய்தி இப்படத்திற்கு கூடுதல் ஈர்ப்பும் பலமும்  கூட்டியுள்ளது. ஒரு முக்கியமான, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் செய்தி. 

மேலும் தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் மகேந்திரனும் அகத்தியனும்  இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இக்கதையில் நடிகர் சதீஷ் தனது பாணி  காமெடியில் அசத்தவுள்ளார். இந்த மெகா கூட்டணி ரசிகர்களுக்கு  ஒரு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு ''மிஸ்டர் சந்திரமௌலி'' என அறிவிக்கப்பட்டுள்ளது. காலங்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றுமே இருக்கும் பெயர் இது . இது குறித்து இப்படத்தின் இயக்குனர் திரு பேசுகையில், '' இப்படத்தின் நடிகர்கள் கூட்டணி படத்திற்குத் தூணாக அமைந்து படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போயுள்ளது.

இயக்குனர் மகேந்திரன், கார்த்திக் மற்றும் அகத்தியன்  போன்ற ஜாம்பவான்களோடு  பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளதை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. பல மடங்கு கூடியுள்ள எனது  பொறுப்பை நன்கு அறிவேன். படத்தின் இந்தத் தலைப்பு எங்களுக்கு ஒரு பெரும் பலமாகியுள்ளது. இந்த எல்லா விஷயங்களின் சங்கமம் இந்தப் படத்தை மிக  பெரிய படங்களுக்கு இணையாக ஆக்கி உள்ளது '' என நம்பிக்கையோடு கூறினார் இயக்குனர் திரு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!