
'AAA ' படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வெற்றி பெற்றாலும் அது மல்டி ஸ்டார் படம் என்பதால், எப்போது சிம்புவின் தனி படம் வெளியாகும் என சிம்பு ரசிகர்கள் காத்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது, சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வந்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.
சமீபத்தில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சிம்பு, ரசிகர்களுக்கு ஒரு சில கோரிக்கைகளை வைத்தார். ஆனால் இல்லாதா ரசிகர்களுக்கு சிம்பு இது போல் வீடியோ வெளியிடுகிறார் என, சமூக வலைத்தளத்தில், விமர்சனங்கள் எழ, அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தனக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றி பால் அபிஷேகம்,
மற்றும் மிகப்பெரிய கட் அவுட் வைக்க வேண்டும் என கூறி புதிய சர்ச்சையில் சிக்கினார். இவரின் இந்த பேச்சை கண்டித்து பால் முகவர் சங்க தலைவர் சிம்பு மீது புகார் கொடுத்துள்ளார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்று வெளியாக உள்ள இந்த படத்தின் பாடலை வரவேற்க ரசிகர்கள் செம்ம வெயிட்டிங்.
மேலும் ரசிகர்களை மகிழ்ச்சியாகும் வகையில், சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இது ரசிகர்களையும் படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சோலோவாக 'வந்த ராஜாவாதான் வருவேன்' படத்தில் சிம்பு கெத்து காட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, என இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். மேலும் மகத், பிரபு, ரம்யாகிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.