vanitha Son SriHari : அம்மா பிக்பாஸ்... மகன் ஹீரோவா? - சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் வனிதாவின் வாரிசு

Ganesh A   | Asianet News
Published : Feb 17, 2022, 11:35 AM ISTUpdated : Feb 17, 2022, 11:54 AM IST
vanitha Son SriHari : அம்மா பிக்பாஸ்... மகன் ஹீரோவா? - சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் வனிதாவின் வாரிசு

சுருக்கம்

வனிதாவின் மகன் ஸ்ரீஹரி, சினிமா சம்பந்தமான படிப்பை முடித்துவிட்டு குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் சினிமாவிலும் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட பீட்டர் பால் விவகாரம் மூலம் வனிதா விஜயகுமார் (Vanitha Vijayakumar) சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறினார். அந்த பப்ளிசிட்டி இன்று வரை தொடர்ந்து வருகிறது. பீட்டர் பாலை பிரிந்த கையோடு சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிசியாக நேரம் செலவிட்டு வருகிறார் வனிதா. 

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் வனிதா (vanitha), பிபிஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டையிட்டு விலகியது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியது.

தற்போது வனிதா விஜயகுமார் வரிசையாக பல படங்களில் கமிட்டாகியுள்ளதால், ஷூட்டிங்கில் செம்ம பிசியாக உள்ளார். சோசியல் மீடியாவில் தான் நடித்து வரும் படங்கள் குறித்த அப்டேட்டுகளோடு, அவ்வப்போது எதையாவது கொளுத்திப்போட்டும் வருகிறார். 

சமீபத்தில் கூட மாலையும், கழுத்துமாக பவர் ஸ்டாருடன் வனிதா வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அது வனிதாவும், பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான புரோமோஷன் என்பதும் பின்னர் ரசிகர்களுக்கு தெரியவந்தது.

இவ்வாறு சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத நடிகையாக வலம் வரும் வனிதா, தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். 

இந்நிலையில், வனிதாவின் மகன் ஸ்ரீஹரி, சினிமா சம்பந்தமான படிப்பை முடித்துவிட்டு குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் சினிமாவிலும் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வனிதாவின் மகன் ஸ்ரீஹரி தற்போது அவரது தந்தையுடன் ஆகாஷ் உடன் வசித்து வருகிறார். ஆகாஷும், வனிதாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.... அஜித்தின் அல்டிமேட் குத்து... வேறலெவல்ல இருக்கே!! ‘Beast’க்கு போட்டியாக Valimai படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!