போடுடா வெடிய... 'வலிமை' ரிலீஸ் தேதி குறித்து அறிவித்த போனி கபூர்..! கொண்டாடும் தல ரசிகர்கள்..!

Published : Sep 22, 2021, 12:36 PM IST
போடுடா வெடிய... 'வலிமை' ரிலீஸ் தேதி குறித்து அறிவித்த போனி கபூர்..! கொண்டாடும் தல ரசிகர்கள்..!

சுருக்கம்

போனி கபூர் தற்போது 'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை வெளியிட்டு, அஜித் ரசிகர்களை உச்ச கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.  

போனி கபூர் தற்போது 'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை வெளியிட்டு, அஜித் ரசிகர்களை உச்ச கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

'வலிமை' திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தீயாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில், சற்று முன்னர், அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ரிலீஸ் தேதி குறித்த தகவலையும் போனி கபூர் வெளியிட்டுள்ளார். இந்த தகவலை தல ரசிகர்கள் வேறு லெவலுக்கு கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: நாக சைதன்யாவிற்கு சமந்தா இரண்டாவது மனைவியா? இந்த ட்விஸ்டை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!!

 

தல அஜித்தை வைத்து, இயக்குனர் எச் வினோத், இரண்டாவது முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தை பிரபல பாலிவுட் பட தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் படமாக்கப்படாமல் இருந்த சண்டை காட்சியையும் படக்குழு முடித்து விட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்: விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி மணிமேகலை..!! என்ன ஆச்சு தெரியுமா?

 

'வலிமை' படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முயற்சியில் படக்குழுவினர் உள்ளதாக கூறப்பட்டாலும்,  ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், சற்று முன்னர் 'வலிமை' படத்தின் தயாரிப்பாளர், போனி கபூர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டு 'வலிமை' வெளியாகும் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் நாளைய தினம் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்கிற தகவலும் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக சுற்றி வந்தாலும், இதுவரை அந்த தகவல் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்: பார்த்தாலே பக்குனு இருக்கே... இலியானாவா இப்படி? வேற லெவல் கிளாமரில் இளம் நெஞ்சை பாடாய் படுத்தும் நியூ போட்டோ!

 

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை ஹுமா குரோஷி நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டியுள்ளார், நேற்றைய தினம் இவரது பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தது அதில் ஜீ 'வலிமை' படத்தின் மீடியா பார்ட்னர் என குறிப்பிடப்பட்டிருந்ததால், திரையரங்கில் ரிலீஸ் ஆன பின்னர் ஜீ ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!