அடகடவுளே.. பிரபல நடிகை மீது ஆசிட் வீச்சு?? இரும்பு கம்பியால் தாக்குதல்.?? முன்னணி நடிகையின் வீடியோ வைரஸ்.

Published : Sep 22, 2021, 09:46 AM ISTUpdated : Sep 22, 2021, 09:47 AM IST
அடகடவுளே.. பிரபல நடிகை மீது ஆசிட் வீச்சு??  இரும்பு கம்பியால் தாக்குதல்.??  முன்னணி நடிகையின் வீடியோ வைரஸ்.

சுருக்கம்

அதைத் தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்று அவர் கவர்ச்சியில் பின்னி எடுத்து வருகிறார், பிரபல இயக்குனர் அனுராக் கஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக  பலவந்த படுத்தினார் என அவர் குற்றச்சாட்டு கூறியது முதல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.  

பிரபல நடிகையை இரும்பு கம்பியால் தாக்கி அவர் முகத்தில் மர்ம கும்பல் ஆசிட் வீச முயற்சித்துள்ள சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த நடிகை காருக்குள் ஏறியதால் ஆபத்தில் இருந்து அவர் தப்பித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை பயல் கோஸ், பிரயாணம் என்ற படத்தின் மூலம் அவர் அறிமுகமானார். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார் ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. அவர் தமிழில் நடித்த படம் தேரோடும் வீதியிலே ஆகும். 

அதைத் தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்று அவர் கவர்ச்சியில் பின்னி எடுத்து வருகிறார், பிரபல இயக்குனர் அனுராக் கஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக  பலவந்த படுத்தினார் என அவர் குற்றச்சாட்டு கூறியது முதல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நடிகை பயல் கோஸ் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சில மர்ம நபர்கள் சிலர் தன்னைப் பின் தொடர்ந்து வந்ததாகவும், அவர்கள் இரும்பு கம்பியால் தன்னைத் தாக்க முயற்சித்ததுடன், தன் மீது ஆசிட் வீச முயற்சித்தபோது அதிஷ்டவசமாக தான் காருக்குள் ஏறி தப்பியதாகவும், ஆனாலும் தனது இடது கையில் அவர்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். பின்னர் அந்த நபர்களை பார்த்துதான் தான் கூச்சல் எழுப்பியதாகவும் அவர்கள் முகமூடி அணிந்து இருந்ததாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அந்த கும்பலிடம் இருந்து தான் தப்பியது மிகப்பெரும் அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய வாழ்வில் இதுநாள் வரையில் இதுபோன்ற ஒரு தாக்குதலை தான் சந்தித்தது இல்லை என்றும், இனி இதுபோன்ற ஒரு சம்பவத்தை சந்திக்கவே கூடாது என்று தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க போவதாக தெரிவித்துள்ள அவர், எதற்காக அவர்கள் என்னை தாக்க வந்தார்கள், இது யாருடைய திட்டம் என்று தனக்கு தெரியவில்லை என்று கூறினார். ஏற்கனவே இயக்குனர் அனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்து பரபரப்பு ஏற்படுத்திய பயல் கோஸ், தற்போது மீண்டும் ஒரு புது புகாரை தெரிவித்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்