விரைவில் டீசர்... 'தல தீபாவளியை' உறுதி செய்த நடிகரால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

Published : Sep 16, 2021, 03:09 PM IST
விரைவில் டீசர்... 'தல தீபாவளியை' உறுதி செய்த நடிகரால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

சுருக்கம்

'வலிமை' திரைப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள், கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்து, தல ரசிகர்களை உச்சாக படுத்தியுள்ளார்.  

'வலிமை' திரைப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள், கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்து, தல ரசிகர்களை உச்சாக படுத்தியுள்ளார்.

தல அஜித்தை வைத்து, இயக்குனர் எச் வினோத், இரண்டாவது முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தை பிரபல பாலிவுட் பட தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் படமாக்கப்படாமல் இருந்த சண்டை காட்சியையும் படக்குழு முடித்து விட்ட நிலையில், போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'வலிமை' படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முயற்சியில் படக்குழுவினர் உள்ளதாக கூறப்பட்டாலும், தற்போது வரை படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. எனவே தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மனதில் நீடித்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இன்று காலை முதலே, வலிமை டீசர் என்கிற ஹாஸ்டேக் ட்விட்டரில் வைரலாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் பலர் டீசர் விரைவில் வெளியாக வேண்டும் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் டூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விரைவில் தல தீபாவளியாக வலிமை வர உள்ளதாகவும், டீசரும் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் தல அஜித்தின் தீவிர ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்து வெளியான 'பில்லா பாண்டி' படத்தில் கூட அஜித்தின் ரசிகராகவே நடித்தார். எனவே இவரது இந்த அப்டேட் மிக முக்கியமாக பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!