கந்து வட்டி விவகாரம்: சீரியல் நடிகை ஜெயலட்சுமி கொடுத்த பரபரப்பு விளக்கம்!!

Published : Sep 16, 2021, 11:16 AM IST
கந்து வட்டி விவகாரம்: சீரியல் நடிகை ஜெயலட்சுமி கொடுத்த பரபரப்பு விளக்கம்!!

சுருக்கம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த, கீதா என்கிற பெண், தங்களுக்கு சுய உதவி குழு மூலம் பணம் தருவதாக கூறிய, பிரபல கட்சியை சேர்ந்தவரும், நடிகையுமான ஜெயலட்சுமி தற்போது அதிக வட்டி கேட்பதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த, கீதா என்கிற பெண், தங்களுக்கு சுய உதவி குழு மூலம் பணம் தருவதாக கூறிய, பிரபல கட்சியை சேர்ந்தவரும், நடிகையுமான ஜெயலட்சுமி தற்போது அதிக வட்டி கேட்பதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். 

தற்போது இதுகுறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து நடிகை ஜெயலட்சுமி தன்னுடைய தரப்பு நியாயத்தை கூறியுள்ளார்.

நடிகை ஜெயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில், கீதா என்கிற பெண் கொடுத்துள்ள புகார் குறித்து கொடுத்துள்ள விளக்கத்தில், கீதா என்பவரை தனக்கு 2019ஆம் ஆண்டு அறிமுகமானதாகவும், ஊரடங்கு காரணமாக தன்னுடைய சுய உதவி குழுவில் உள்ள பெண்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும், குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளதாக கூறினார்.

எனவே கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டுமே,  கீதாவின் குழுவில் இருந்த பெண்களுக்கு 17.50 லட்ச ரூபாய் கடனாக கொடுத்தேன். இந்த பணத்தை 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்தால் வட்டி தேவையில்லை என்று கூறினேன். ஆனால் நான் கொடுத்த பணத்தை கீதா குழுவில் உள்ள மற்ற பெண்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இப்போது பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

ஆனால் கீதாவோ, நடிகை ஜெயலட்சுமி கந்து வட்டிக்கு பணம் கொடுத்து தங்களை ஆட்களை வைத்து மிரட்டுவதாக கூறியுள்ளார். யார் சொல்வது உண்மை என்பதை தெரிந்து கொள்ள போலீசார் இரு தரப்பு மனுக்களையும் பெற்று கொண்டு தற்போது தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். போலிசாரின் விசாரணைக்கு பின்னரே யார் சொல்வது உண்மை என்பது தெரியவரும். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!