
கொரோனா காலத்தில், ஏழைகள், படிக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் தன்னுடைய சொந்தமான இடத்தை அடமானம் வைத்து கூட உதவிகள் செய்து வந்த, சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து என்டிடிவி -யின் அறிக்கையின்படி, சோனு சூட்டிற்கு மும்பையில் சொந்தமாக உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் உட்பட ஆறு இடங்களில் அதிகாரிகள் தற்போது 'சர்வே' செய்து வருகின்றனர். ஆனால் இதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. என தெரியவந்துள்ளது.
மேலும் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் ஐடி சோதனையிடப்படுவது இது முதல் முறை அல்ல ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் கடந்த மாதம் தான், ‘தேஷ் கா மென்டர்’ திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் சோனு சூடு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இந்த ஐடி சோதனை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.