சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும்.. 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

By manimegalai aFirst Published Sep 15, 2021, 3:00 PM IST
Highlights

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரைலரை இன்று நடிகர் சூர்யா வெளியிட்டார்.
 

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரைலரை இன்று நடிகர் சூர்யா வெளியிட்டார்.

எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, 240 நாடுகளிலும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

அமேசான் பிரைம் வீடியோ, 2டி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தை, நடிகர் சூர்யா வெளியிட்டார்.  இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று வெளியாகிறது. இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ ஒரு கிராமீய வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் திரைப்படம்.  

மனிதநேய உணர்வுகளை நகைச்சுவை கலந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன், நடிகை வாணி போஜன், நடிகர் மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார், ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்‘ படத்தின் முன்னோட்டத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் இதய பகுதியாக திகழும் கிராமம் ஒன்றை உற்று நோக்குகிறது. அங்கு 35 வயதான குன்னிமுத்து என்ற விவசாயி, தன் மனைவி வீராயி என்பவருடன், காணாமல் போன தன்னுடைய பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்த கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு காளைகளை தேடுகிறார்கள். இதற்கான தேடலில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது உள்ளூர் காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான நடவடிக்கைகளில் இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதன் போது ஏற்படும் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவை ததும்ப சொல்லும் வகையில் கதை பயணிக்கிறது.

இந்த படம் குறித்து தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா பேசுகையில்,' ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தை பார்வையாளர்களுக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எளிய மனிதர்களின் வாழ்க்கையில் இடம்பெறும் நகைச்சுவையுடன் கூடிய மனித நேய உணர்வு சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக நாங்கள் அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார். இப்படி இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!