அஜித்தின் 'வேற மாறி' பாடல் படைத்த சாதனை!! போனி கபூரின் ட்விட்டை கொண்டாடும் ரசிகர்கள்!!

Published : Sep 15, 2021, 11:58 AM IST
அஜித்தின் 'வேற மாறி' பாடல் படைத்த சாதனை!! போனி கபூரின் ட்விட்டை கொண்டாடும் ரசிகர்கள்!!

சுருக்கம்

வலிமை படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான 'வேற மாறி' பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளதை போனி கபூர், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட இதனை, அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  

வலிமை படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான 'வேற மாறி' பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளதை போனி கபூர், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட இதனை, அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தல அஜித்தை வைத்து, இயக்குனர் எச் வினோத், இரண்டாவது முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தை பிரபல பாலிவுட் பட தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் படமாக்கப்படாமல் இருந்த சண்டை காட்சியையும் படக்குழு முடித்து விட்ட நிலையில், போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'வலிமை' படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முயற்சியில் படக்குழுவினர் உள்ளதாக கூறப்பட்டாலும், தற்போது வரை படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. எனவே தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மனதில் நீடித்து கொண்டு தான் இருக்கிறது.

'வலிமை' படத்தில் இருந்து, சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற, 'நாங்க வேற மாதிரி' என்ற பாடல் தற்போது 25 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் இந்த பாடல் வரிகள் எழுதி இருந்தார். 'நாங்க வேற மாதிரி' பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்ததை தயாரிப்பாளர் போனிகபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்க, அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?