என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம் என சொன்னார்கள்! இசை வெளியீட்டு விழாவில் சாந்தனு உருக்கம்!

By manimegalai aFirst Published Sep 13, 2021, 8:15 PM IST
Highlights

Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும்  காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. 

Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும்  காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி வகையில் வரும் திரைப்படங்கள் அரிதாகி விட்டது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில்,  ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும்படி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம்.  

பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் இசை விழா இன்று ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது. 

இவ்விழாவில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் கூறியதாவது...

நீண்ட நாட்கள் கழித்து எனது படத்தின் இசை விழா இத்தனை பெரியதாக நடப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நன்றி. ரவீந்தரும் நானும்  ஃபேஸ்புக் மூலம் நீண்ட நாள் பழக்கம், நீண்ட காலமாக படம் செய்யலாம் என பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் ஒரு புராஜக்ட பேசி நின்றுவிட்டது. 

என்னுடன் படம் செய்ய வேண்டாம் என நிறைய பேர் சொன்னார்கள், ஆனால் எல்லாவற்றையும் மீறி என் மீது நம்பிக்கை வைத்தார். ஒரு படத்தை ஆரம்பித்து, முழு நம்பிக்கை வைத்து இப்போது படத்தையும் முடித்து விட்டார். படத்திற்கு தேவையானதற்கு செலவு செய்ய, அவர் தயங்கியதே இல்லை. இந்தப்படம் இத்தனை அழகாக வர ரவீந்தர் மட்டுமே முக்கிய காரணம். இசையமைப்பாளர் தரணுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். 

இப்படத்தின் பாடல்கள் உங்கள் அனைவரையும் கவரும். இயக்குநர் ஶ்ரீஜர் கதை சொல்லும்போதே சிரித்து கொண்டே இருந்தேன். இன்றைய சூழலில் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரித்து மகிழ்வது தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதை ஶ்ரீஜர் இந்தப்படத்தில் நிறைவேற்றியுள்ளார். யோகிபாபு பிஸியான நேரத்தில் எனக்காக இந்தப்படத்தை செய்துள்ளார். அவர் அன்புக்கு நன்றி. நான் 2017,18 காலகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன், அந்த நேரத்தில் என்னை நம்பி நான் நன்றாக இருக்க வேண்டும் என படம் செய்ய வந்தவர், ரவி மற்றும் விக்ரம் சுகுமாரன் இருவரும் தான். 

அதில் ரவீந்திரன் படத்தை முடித்து கொண்டு வந்துவிட்டார் அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இந்தப்படத்தில் நர்மதா வேணி மிக அழகாக கலை இயக்கம் செய்துள்ளார். அவர் போல் நிறைய பெண் கலை இயக்குநர்கள் வரவேண்டும். சமந்தா எனக்கு நண்பர் அவரிடம் அழகாக இருக்கீங்க, தமிழ் பேசறீங்க நான் சொல்லியிருக்கிறேன். அதே போல் தான் அதுல்யாவும் அழகாக இருக்கிறார் தமிழில் பேசுகிறார். சமந்தாவுடன் அவரை ஒப்பிடவில்லை. அதுல்யாவின் திறமைக்கு நிறைய வெற்றிகளை பெறுவார். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி என கூறினார். 

click me!