
பிக்பாஸ் கவின் நடித்து முடித்துள்ள, 'லிப்ட்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய பிரச்சனை தலை தூக்கியுள்ளது.
'ஈக்கா என்டர்டைன்மென்ட்' நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'லிப்ட்' திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை. லிப்ரா புரோடக்சன்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் 50 சதவீத முன்பணம் செலுத்தி, மீதம் 50 சதவீத தொகையை படத்தின் வெளியீட்டிற்கு முன் செலுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்த பிறகு, அக்டோபரில் படத்தை தியேட்டரில் வெளியிடலாம் என முடிவு செய்து, கடந்த ஒரு மாதமாக தயாரிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம், ஆனால் எங்கள் அழைப்புகளை எடுப்பதில்லை.
இது சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். எந்த பதிலும் அளிக்கவில்லை. தற்போது 'லிப்ட்' பட தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன் உடன் செய்த ஒப்பந்தம் முடித்துக் கொள்ளப்பட்டது என தானாகவே ஒரு வேடிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'லிப்ட்' படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை லிப்ரா நிறுவனத்திடம் தான் உள்ளது என்பதை மீண்டுமொருமுறை நினைவு படுத்த விரும்புவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது லிப்ரா புரோடுக்ஷன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.